சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

எனக்கு தேசிய விருது மீது அதிக ஆர்வம் உண்டு. எப்படியாவது தேசிய விருது வழங்கும் விழாவில் ஏதாவது ஒரு விருதை வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது உள்ள கிராபிக்ஸ், ஸ்பெஷல் ஃஎபெக்ட்ஸ் போன்ற துறைகளுக்கு கூட தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் ஏன் தேசிய விருது கொடுப்பதில்லை? அதனால் ஒரு நகைச்சுவை நடிகனாக என்னால் தேசிய விருது வாங்க முடியாது. அதனால் எனது ரூட்டை மாற்றி கதையின் நாயகனாகவோ, குணச்சித்திர நடிகனாகவோ தேசிய விருதை வாங்குவேன்.
-கருணாஸ்(திரைப்பட நடிகர்)

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை. டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு.
-மார்க்கண்டேய கட்ஜுமுன்னாள் நீதிபதி பிரஸ் கவுன்சில் தலைவர்)

எந்த வழக்கு போட்டாலும் ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கப்போவதில்லை. தைரியமாக, தெம்பாக, துணிவுடன் வழக்கை சந்திப்பேன். இந்த ஆற்றல் எனக்கு மட்டுமல்ல; திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் உண்டு. வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.
-மு க ஸ்டாலின்(திமுக பொருளாளர்)

அறிவாலயத்தை எடுப்பேன் என்கிறார். அறிவாலயத்தை எடுப்பது என்ன அவ்வளவு சாதாரணமா? அப்படித் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும். திமுகவின் சொத்து அறிவாலயம். ஏழை, எளியோர் ரத்தத்தைச் சிந்தி எழுப்பிய கட்டடம் அது. திமுகவின் சாதாரணத் தொண்டன்கூட அந்தக் கட்டடத்தை எடுக்க விடமாட்டான். எங்களுடைய நரம்புகள், எலும்புகள், மண்டையோடுகள் நொறுங்கிப் புதைந்து போனாலும்கூட அதை எடுக்க முடியாது.
-கருணாநிதி(திமுக தலைவர்)

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு அதிமுகவின் பங்களிப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது. அதிமுகவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் உண்மையாக உழைத்தும், வலுவான பிரசாரம் மேற்கொண்டும் ஆட்சியில் அமர வைத்தோம். ஆட்சியில் அமர்ந்தவுடன் எங்களை கழற்றிவிட்டதால் ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட அவசியம் ஏற்பட்டுள்ளது.
-ஜி.ராமகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர்)

தற்போது மரியாதை இல்லாத கட்சியுடன் கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று தான் அதிமுகவை விட்டு பிரிந்து வந்தோம். தேமுதிகவை மதித்த கட்சிகள் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்தோம். அதற்கு காரணம் சேலம் மாநாட்டில் தொண்டர்கள் விரும்பியது தான் என்றார் பிரேமலதா.
-பிரேமலதா விஜயகாந்த்(தேமுதிக)

தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு குதிரையும் தனித்தனியாக ஓடுகின்றன.
-வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்)

ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு மாபெரும் தலைவர் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன். இந்த ரத்தமில்லாத ஒரு புரட்சியில் பங்கு கொண்ட எல்லா இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன். அமைதியான இம்மாதிரியான போராட்டம், சத்தியாக்கிரகத்தின் பிறப்பிடமான, இந்தியாவில் மட்டும் தான் நடக்க முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
-ரஜினிகாந்த்(திரைப்பட நடிகர்)

12 3 4 Next Last Page 1 / 24

உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.