For Tamil Fonts
 அஞ்சலி
 சிறப்புப்பார்வை
 சிறப்புக் கட்டுரை
 அரசியல்
 சமூகம்
 இலக்கியம்
 கலை
 ஆன்மீகம்
 இயற்கை மருத்துவம்
 நேர்காணல்
 விருந்தினர் பக்கம்
 திட்டிவாசல்
 சினிமா சினிமா
 முகப்பு
 கடந்த பகுதிகள்



தெற்காசிய நாடுகளின் பெண்குழந்தைகள்
பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்களின் முகம் வாடித்தான் போகிறது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லத் துணிகிறாள் என்றால், சமூகத்தில் பெண் பிள்ளைகளின் மதிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

செப்டம்பர்-11 பாரதி நினைவு தினம் சமூகம்
தெ.மதுசூதனன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழின் நவீனமயப்பாட்டின் ஆதார சுருதியாக திகழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். வர் ஒரு மகாகவி. இன்றுவரை 'மகாகவி' என்ற அடைமொழிக்கு உரித்தானவராக திகழ்கின்ற ஒரே கவிஞர் பாரதி மட்டும்தான். பாரதி மகாகவியாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, அவரது மொழியின் ஆற்றல், அதன் இலக்கியப் பண்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டுவிடுகின்றன.

ஆக மொழிக்கும் தான் வாழ்ந்த சமுதாயத்திற்கும் ஒருவரால் கையாளப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் சிந்தனைகள், அவரை மகாகவியாக கருதப்படுவதற்கான 'அடிப்படைகளை' வழங்கிவிடுகிறது. அந்த 'அடைப்படைகள்' சமுதாய மாற்றத்தை, சமுதாயச் சிந்தனையை, கலை இலக்கியச் செல்நெறிகளை ஆற்றுப்படுத்தக் கூடியதாக இருக்கும். பாரதிக்கு இந்தத் தகுதியும் சிறப்பும் நிகழ்த்தியிருக்கிறது.

சமகாலப் பிரச்சினைகளைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதிலும் எதிர்காலத்தின் நம்பிக்கை வெளிச்சமாய் திகழவும் பாரதி ஓர் இயக்கமானார். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் 'பாரதி -யக்கம்' புதிய செல்நெறிகளின் உருவாக்கத்துக்கு உறுதுணையாக இருக்கிறது.

மொழிப்பற்றம் நாட்டுப்பற்றும் உலகப்பற்றும் உருகிக் கலந்து ஒளிரும் மாண்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியிடம் முதன்முதலில் சங்கமிக்கிறது. இந்தச் சங்கமம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திசை திரும்பலுக்கு, மடைமாற்றத்துக்கு புதிய பாய்ச்சலும், புதிய தளமும் அமைத்து புதிய செல்நெறிகளின் உருவாக்கத்துக்குக் காரணமாயிற்று.

இன்று பன்முகப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தமிழை நவீனமயப்படுத்தி வருகின்றது. இந்த நவீன மயப்பாட்டுக்கு முக்கியமான உள்ளீடு ஒன்று உண்டு. அதாவது இந்த நவீனமயப்பாடு ஜனநாயக அடிப்படையில் செல்லுதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் நவீனமயப்பாடு நிச்சயப்படுத்தப்படும் மொழி பொது உரிமையானதால், அடிப்படை பொதுமை வலுக்கும் பொழுதுதான், மொழியின் வளமும் பெருகும்.

இந்தப் பேருண்மையைப் பாரதி உணர்ந்திருக்கிறார். தமிழும் தமிழ்ப் பண்பாடும் தமிழரும், அடிப்படையான ஜனநாயக மாறுதலுக்கு, மக்கள் ஈடுபாட்டுக்கு முழுமையாக இடம் கொடுக்கும் க்பொழுதுதான், தமிழும், தமிழரும் முன்னேற முடியுமென்பதை பாரதி தனது பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிற் கூறுகின்றார்.

''எளிய பதங்கள், எளிய நடை எளிதிலே அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.

நாம் இதிலே வரும் 'பொது ஜனங்கள்', 'தாய்மொழிக்குப் புதிய உயிர்' என்ற தொடர்களை ஊன்றிக் கவனிக்க வேண்டும். இவை இன்றைய தமிழை நவீனமயப்படுத்துவதன் ஜனநாயகப்படுத்துவதன் குரல்கள். இந்தக் குரல்கள் இன்னும் பல்முனைகளில் இருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டி உள்ளது.

''பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியின் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை'' என்று தமிழ் இலக்கியத்தை காலத்துக்கு ஏற்றவாறு நவீனமயமாக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார். தொடர்ந்து தமிழும், தமிழ்ப்பண்பாடும், தமிழர்களும் ஆங்கிலேய ஆட்சியால் ஒடுக்கப்பட்டதைப் பற்றி உணர்ந்து பாரதி எழுதியுள்ளார். ''மெல்லத் தமிழினிச் சாகும். அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்'' என்று கூறப்படும் கூற்றைப் பாரதி எதிர்கொண்டார்.

நாட்டு விடுதலை, சமத்துவ எண்ணம் பாரதியை உந்திய சக்திகளாகும். நம்மிடையே ஒற்றுமைக்குப் பாதகமாக -ருந்த மதவேற்றுமை, -னவேற்றுமை, மொழி வேற்றுமை, பால் வேற்றுமை, பொருளாதார வேற்றமை ஆகியவற்றை அகற்றுவதற்கு தனது சுடர்மிகு ஒளியைப் பாய்ச்சி வந்தார்.

பாரதி ஒடுக்கப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் பிரதிநிதியாக அந்த மக்களின் விடுதலைக்காக அனைத்துத் தளைகளிலிருந்து விடுபட்ட மனநிலையில் ஆத்மத்துடிப்புடன் இயங்கி வந்தார். ஆகவேதான் பாரதி ''விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போல'' என்று பாடினார். இந்த மனநிலை இன்றைய சமகாலத்துக்கும் பொருந்தக் கூடியதாகவும், இதனையே -ன்றும் வலியுறுத்த வேண்டியும் உள்ளது.

தொகுப்பு