|
தனிமனித உணர்வுகளையும் மீறிய ஒரு சமூகப் படிமமாகவே
இசை விளங்குகின்றது. அதாவது சமூக இருப்பிலிருந்தே இசை
உணர்வுகள் கிளர்ந்தெழுகின்றன. உணர்வுகள் இருப்பைத்
தீர்மானிப்பதில்லை. மந்திரமும் சடங்குகளும் புரதான
கிராமிய வாழ்க்கையின் அறிக்கைக் கோலங்களையும் எழுச்சிக்
கேலங்களையும் வெளிப்படுத்தின. மந்திரங்களிலும்,
சடங்குகளிலும் அவற்றுக்குரிய ஒலியும், சைகைகளும்
ஒன்றிணைந்திருந்தன. இவை மனிதரின் உழைப்போடும்,
கருவிகளின் கையாட்சியோடும் சமூக இயக்கங்களோடும் தொடர்பு
பட்டிருந்தன. உற்பத்தி முறைமையிலிருந்து மனிதன்
எழுப்பும் ஒலிகள் பிரிக்க முடியாதிருந்தன. கிராமியக்
கூட்டுச் செயற்பாட்டின் ஊடகமாக இசையும், மொழியும்
அமைகின்றன. உற்பத்தி முறமையில், 'பார்த்துச் செய்தல்'
அல்லது 'பின்பற்றுதல்' சிறப்பார்ந்த பணியாக அமைகின்றது.
பார்த்துச் செய்யும் உற்பத்தி முறைமை உள்ளுணர்வுடனும்,
பிரக்ஞையுடனும் கூடிய கூட்டுச் செயல் முறையாகும்.
இசையைப் 'பாவனை இசை' , 'சுட்டிக்காட்டுதல் இசை' என
இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தமது சிந்தனைகளுக்கும்
மனவெழுச்சிக்கும் ஏற்றவாறு தன்னை ஒரு குழந்தையாக,
தலைவனாக, வேளையாளனாகப் பாவனை செய்து அதனை அடியொற்றி
எழுப்பும் இசை 'பாவனை இசை' எனப்படும்.
இன்ன இன்ன
செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வகையிலே உற்பத்தியின்
பொழுதும், உழைப்பின் பொழுதும், சமூகத்தொடர்புகளின்
பொழுதும் உருவாக்கப்படும் இசை 'சுட்டிக் காட்டல் இசை'
எனப்படும். இவ்வகையாகப் பாகுபடுத்தப்படும் இசையானது
மேலும் பல பரிமாணங்களைக் கொள்ளுகின்றது. கிராமியத்
தொழில் முறைகள் உடல் வலுவைப் பெருமளவில்
பயன்படுத்துவனவாக அமைகின்றன. உடல் வலுவைப்
பயன்படுத்தித் தொழில் புரியம் போது - எழும் ஒலி - 'உடல்
சார் ஓசை' எழுப்பப்படும். உடல் வலுவைத்
துரிதப்படுத்தும் நோக்குடன் அது பயன்படுத்தப்படும்.
தண்ணீர் -றைக்கும் பொழுது 'எக்...எக்...எக்கு...'
என்பதும் படகு வலிக்கும் பொழுது 'ஏ லே லோ' என்பதும்
இதற்கு உதாரணங்களாகும். 'எக்...எக்' என்பது உடல்
வலுவின் பிரயோகத்தையும் 'எக்கு' என்பது ஒய்வையும்
குறிப்பிடும். உடல்சார் ஓசைகளை மனவெழுச்சிகளுடன்
கலந்தும், மொழி சார்ந்த தொடர் பாடல்களுடன் இணைத்தும்,
உற்பத்தி நடவடிக்கைகளில் மீளவலியுறுத்தும் பொழுது
தோன்றும் பாடல்கள் இசை வளச்சியின் பிரதான பரிணாமத்தைக்
காட்டுவதாக அமையும். கிராமங்களின் தொழிற்பிரிவுகள்
வளர்ச்சியடையும் பொழுது தொழில் செய்வோரா ஆக்கப்படும்
பாடல்கள் என்ற அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பாடல்
ஆக்குவோர், பாடுவோர் என்ற பிரிவுகள் வளர்ச்சியடையத்
தொடங்கின. இந்நிலையில் நேரடியான உழைப்புச் செயல்
முறைகளிலிருந்து இசை துண்டிக்கப் படலாயிற்று. உழைப்புப்
பாடல்களோடு வேறுபாடு கொண்ட பாடல் வடிவங்கள் தோன்றலாயின.
இவற்றிலே தூய குரலுக்கும் இசைக் கருவிகளுக்கும்
முக்கியத்துவம் வழங்கப்படும். ஓசை நயத்துக்கு
அழுத்தங்கள் கொடுக்கப்படும். ஓசை நய ஒழுங்கமைப்புக்ன
சுர வரிசைகளும் இதன் வளர்ச்சியினூடே
கண்டுபிடிக்கப்படலாயின. ஓசை நயம் முதன்மைப்படுத்ப்பட,
இசையின் உழைப்போடு இணைந்த பண்புகள் சரிவநடையத்
தொடங்கின. மனிதனுடைய செயல்திறன்களை வளர்க்கும்
புறநிலை நோக்குடையதாக சடங்குகளும், புரதான கல்விச்
செயலமைப்புக்களும் வளரத் தொடங்கிய பொழுது உற்பத்தியைப்
பெருக்குவதற்குப் பாவனை நடனங்களும், பாவனை இசையும் துணை
செய்யும் என்பது குலக் குழுச் சமூகங்களின்
நம்பிக்கையாக விளங்கியது. காற்றாகவும், மழையாகவும்,
நிலமாகவும் பாவனை செய்து ஆடலும் பாடலும் நிகழ்த்துவதன்
வாயிலாக உற்பத்திப் பெருக்கம் ஏற்பட முடியும் என்ற
நம்பிக்கையின் வாயிலாக 'மந்திரம்' வளர்ச்சியடையத்
தொடங்கியது. இவ்வாறாக இயற்றப்படும் நிகழ்ச்சிகள்
உற்பத்தியிலே கூடுதலான கவனத்துடன் ஈடுபடுவதற்கான
உளவலிமையைக் கொடுப்பதாகவும் அமைந்தது.
கிராமியப்
பின்புலத்தில் இசையானது மந்திரங்களுடன் இணைந்ததாக
வளர்ச்சி பெறத் தொடங்கியது. மந்திரம் என்பது
மனவெழுச்சியும், கருத்தோற்றமும் கலந்ததாக அமைந்தது.
மந்திரங்களில் மனித விருப்பங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. இயற்கைக் கட்டுப்பாடுகளுக்கு
உட்படுத்தும் பொழுது எழும் குதூகலம் மந்திர இசையில்
வெளிப்படும். மந்திம் என்பது முற்றிலும் அறிவியல்
அணுகுமுறையைக் கொண்டது என்று கொள்ளமுடியும். அவற்றில்
அதீதமான கற்பனைகள் நிறைந்திருக்கும். மனவெழுச்சி
பூர்வமாக அவை மேற்கெள்ளப்படும் பொழுது மந்திர இசையை
கேட்பவர்கள் உந்தப்படுகின்றனர். இவ்வகையன சமூக இயக்கம்
இசைக்கு இன்றியமையாத பண்புக் கூறாக விளங்கும்.
அடுத்த வாரம் தொடரும்... |