| சென்னையில் திருவையாறு |
கலை |
| கேடிஸ்ரீ |
|
காலங்களில்
சிறந்தது வசந்தம் மலர்களில் சிறந்தது மல்லிகை மாதங்களில் சிறந்தது
மார்கழி
இப்படி ஒவ்வொரு
காலத்திற்கும், மாதத்திற்கும் என்று சிறப்புகளும், பெருமைகளும்
உண்டு. அந்த வகையில் இசைமழைக்கு ஏற்ற மாதம் மார்கழி என்றே சொல்லலாம்.
ஆம்!... சூடிக்கொடுத்த
சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள் திருப்பாவை நோன்பு இருந்ததும்
மார்கழியில்தான். அதுபோல் தியாகராஜருக்கு ஆராதனை விழாவும் மார்கழி
மாதத்தில்தான்...பெண்கள் அதிகாலையிலே நீராடி தங்கள் வீட்டின் முன்
விதவிதமான கோலங்கள் இட்டு அழகுப்படுத்துவதும் மார்கழியில்தான்.
இப்படி மார்கழி பெருமையைச்
சொல்லிக் கொண்டே போகலாம்.
தியாகராஜர் பிறந்த
திருவையாற்றில் வருடா வருடம் தியாகராஜ ஆராதனை விழா மார்கழி
மாதத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலிருந்தும்
கர்நாடக இசைக்கலைஞர்களும், இசை ரசிகர்களும் ஒன்றுகூடி
தியாகராஜருக்கு ஆராதனை செய்வதும், கூடிய அத்துனை கலைஞர்களும்,
ரசிகர்களும் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடுவதும் சிறப்பு.
இத்தகைய சிறப்புமிக்க
தியாகராஜ ஆராதனை விழாவிற்கு செல்ல வேண்டும்; இசைக்கலைஞர்கள் பாடுவதை
கேட்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இசை பிரியர்களுக்கு
இருக்கும். ஆனால் எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
இப்படிப்பட்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் 36 மணிநேரம்
இசைநிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற இசைக்குழுவான 'லக்ஷ்மண்ஸ்ருதி'
கடந்த சில ஆண்டுகளாக 'சென்னையில் திருவையாறு' எனும் கர்நாடக இசை
நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி வருகிறது.
கலாலயா யுஎஸ்ஏ, நாடக
அகாடமி மற்றும் சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் ஆகியவை லக்ஷ்மண்
ஸ்ருதியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை அளித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
வருகிற 21ம் தேதி முதல்
25ம் தேதி வரை (டிசம்பர்) சென்னையிலுள்ள காமராஜர் அரங்கில் 'சென்னையில்
திருவையாற்றின்' இந்த வருட இசைவிழா நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.
முதல் நாள் விழா காலை 9மணிக்கு தியாகராஜரின் பஞ்சரத்ன
கீர்த்தனையுடன் தொடங்குகிறது.
வளர்ந்த
கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் அவர்களது திறமையை
மேன்மேலும் வளர்த்துக் கொள்வதற்கும், வெளிகொணர்வதற்கும் மேடை
அமைத்து கொடுக்கிறது 'சென்னையில் திருவையாறு'
பிரபல இசைகலைஞர் பி.எஸ்
நாராயணசாமியின் தலைமையில் பஞ்சரத்னகீர்த்தனா பாடவிருப்பது
சிறப்பம்சமாகும்.
விழா மேடை தியாகராஜ ஆராதனை
மண்டபத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருப்பது
குறிப்பிடத்தக்கது. சுமார் 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்
மேடையில் அமர்ந்திருக்கும் வகையில் மேடை அமைக்கப்படவுள்ளது. மேலும்
பஞ்சரத்ன கீர்த்தனையை ரசிகர்களும் பாட வேண்டும் என்ற நோக்கில்
பஞ்சரத்ன கீர்த்தனைகளை எல்லோருக்கும் விநியோகிக்கும் வகையில்
அச்சடித்து வைத்துள்ளனர் விழா குழுவினர்.
ஐந்து நாள்
நடைபெறவிருக்கும் இவ்விழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை
இடைவிடாது நடைபெறவிருக்கிறது.
கர்நாடக சங்கீத இசை
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றும் உண்டு
ஆம்.! முதல்நாள்
விழாவிற்கு வரும் அனைத்து இசை ரசிகர்களுக்கும் அனுமதி இலவசம்
என்னும் இனிப்பாக செய்திதான் அது!
மேலும் விவரங்களுக்கு: http://thiruvaiyaru.lakshmansruthi.com
தொகுப்பு
|