|
சென்ற வாரத்தொடர்ச்சி...
படிப்பை முடித்த உடனேயே கும்பகோணம் வந்து விட்டீர்களா?
''1967-68 ல இரண்டாவது டிப்ளமோ முடித்தேன். முடித்த
மறுதினம் காலை 10.30 அளவில் அடையாறுல மாந்தியத் ரோடுல
சீனிவாசன் என்பவருடைய டிசைன் சென்டர் இருந்தது
என்னுடைய நண்பர் ஒருத்தர் இருந்தார். என்னுடைய
புத்தகத்தில அதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியிருக்கேன்.
அந்த இடத்தில வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அது
தினக்கூலி. அதுல நான் நுழைந்து அதிலேர்ந்து ஆரம்பத்தில
ஒரு வருடம் மாத்தூர் என்ற இடத்தில் காஞ்சிபுரம்
பக்கத்தில் -ருக்கிறது. அங்கிருந்து நேராக கும்பகோணம்
வந்து இன்ஸ்ட்ரக்டராக சேர்ந்தேன். ஒரே இடத்தில் முப்பது
வருடம் வேலை பார்த்தேன்... ஒரே டிபார்ட்மெண்ட்ல.. அது
எனக்குப் பெருமைதான்''
மெட்டல் செக்ஷனில் இருந்தீர்களா?
''இல்ல,
Sculpture Department-ல . அப்ப அதை மாடலிங்
டிப்பார்ட்மெண்ட் என்று சொல்லுவார்கள். சில காலத்தில
சில வார்த்தைகள் எல்லாம் மாறும்''
அப்ப தனபாலோட உறவு ஏற்பட்டது எப்படி?
''தனபால் வந்து எனக்கு ஆசிரியர்...குரு. மெட்ராஸில நான்
படிக்கும் போது எனக்கு ஆசிரியராக இருந்தவர். முதல்வராக
ராய் செளத்திரி போய் பணிக்கர் வந்திருந்தார்.''
எல்லா சமூகத்திலிருந்தும் வருவார்களா கல்லூரியில்
படிப்பதற்கு?
''பலதரப்பட்ட மக்கள் வந்து படித்தார்கள். கலை என்பது
ஒரு சமுதாயத்திற்கு மட்டும் உரியதல்ல. பொதுவானது.
ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அது பலநோக்கு உடையது.''
அதை மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரித்தார்களா?
''ஸ்தபதிகள் என்ற பாரம்பரியம் மிக்க சமுதாயத்திலிருந்து
குழந்தைகள் வரும் பொழுது அவர்கள் கொஞ்சம் genius -யாக
இருப்பார்கள் மற்றவர்களைக் காட்டிலும். -ன்னிக்கு -ருக்கக்கூடிய
கோபுலு, கலை கங்கா, சில்பி போன்ற பெரும் ஓவியர்கள்
எல்லாம் இந்தக் கலை கல்லூரியிலிருந்து தான்
வந்திருக்காங்க. மகாலிங்கம் என்ற ஓவியர் ஆனந்தவிகடனில்...
அந்தக் காலத்தில்... மாலி.. என்று பெயர் பெற்றவர்.
இவங்களெல்லாம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் கும்பகோணத்தில்
இருந்து தான் வந்தார்கள். இவர்களெல்லாம் மேதைகள்.
ஆதரித்ததினால்தானே இவர்கள் எல்லாம் பெரிய ஆளாக
வந்திருக்கிறார்கள். இதை எல்லாம் சொல்வதற்குச் சிலர்
வெட்கப்படுவாங்க. ஆனா நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்.
அவங்க எல்லாம் மேதைகள்.''
இவர்கள் எல்லாம் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் -ல்லையா?
''ஆமாம். அதைத்தான் சொல்ல வருகிறேன். பல சமூக மக்களும்
படித்திருக்கிறார்கள். ஆர்வத்தோடு படித்தால் எந்தக்
கலையையும் படித்துவிடலாம் தானே! அதைத்தானே நுண்ணறிவு
என்று சொல்லுகிறோம். அந்த நுண்ணறிவு உடையவன் தான்
எந்தக் கலையிலும் வரான். அந்த மாதிரி வரும் பொழுது
நுண்ணறிவு படைத்தவன் இந்தக் கலை உலகத்தில கொஞ்சம்
அதிகமாக வருகிறான். அதனால மற்ற சமுதாயமும் இதில
வந்திருக்கு...''
பாரம்பரியம் மிக்க உலோகச் சிலைகள், கல் சிலைகள்
என்பவற்றில் இருந்து மாறுபட்டு எப்படி புடைப்புச்
சிற்பத்தில் (Relief Sculpture) ஆர்வம் வந்தது? இது
உங்களுக்கு ஸ்கூல்ல படிக்கும் போதே வந்ததா?
''
கலைக் கல்லூரியில படித்து ஓர் முதிர்ந்த நிலையில்
வெளிவரும் போது பொதுவா கலையைப் பொறுத்த வரையில
தனக்கென்று ஒரு பாணி என்ற அளவில தான் கலைஞர்கள்
வெளியில வந்திருக்காங்க. நுண்கலைகளைப் பொறுத்தவரையில்
ஓவியம், சிற்பம், நாட்டியம், சங்கீதம் போன்றவற்றுக்கு
பாணி ரொம்ப அவசியம். என்னுடைய பாரம்பரியமே எனக்கு ஒரு
விதத்தில் சிக்கல் பண்ணுவது உண்மை. இந்த பாரம்பரியத்தை
பற்றி சொல்லும் போது அதற்கு சாஸ்திரம், சன்மான லட்சணம்,
சாமுத்திரிகா லட்சணம், கண் இப்படி இருக்கணும், மூக்கு
இப்படி இருக்கணும், உதடு இப்படி இருக்கணும், இன்ன இன்ன
நிலையில இன்ன இன்ன மாதிரி இருந்து அவங்களோடு குணம்
என்ன... என்று ஜோதிடம் சொல்லுது... வடிவ அமைப்பு, ஒரு
உருவத்தை வடிவமைக்கும் பொழுது ஒரு வடிவத்தோட உயரம்,
நீளம், அகலம் கணக்கு பண்ணும் போது இது சாஸ்திரம். இதை
விட்டு நாம் வெளியில் வர முடியாது. அந்தக் குறிப்பிட்ட
விஷயத்திற்குள் தான் இருக்கணும். அதைக் கண்டிப்பாகக்
கடைப்பிடித்து வருவதால் தான் இன்றைக்கும் அந்தக் கலைகள்
மரியாதைக்குரியனவாக போற்றப்படுகின்றன. என்னைப்
போன்றவர்களெல்லாம் இன்றைய கால கட்டத்தில நவீன பாணிக்கு
வந்துவிட்டதால் அது கெட்டுப் போய் விட்டதா என்று
கேட்கக் கூடாது. எனக்கென்று ஒரு பாணி எடுத்துக் கொள்ள
வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஹைஸ்கூலில்ல படிக்கும்போதே
வந்து விட்டது.
எங்களுடைய பாடத் திட்டத்தில வந்து காம்போஸிஷன் என்று
சொல்லுவாங்க... கூட்டமைப்பு சிற்பங்கள் என்று பெயர்.
அதாவது ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு composition. அது ஒரு
சப்ஜெக்டாகவே பாடத் திட்டத்தில உண்டு. அதில எனக்கென்று
ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு இந்தியன் ஸ்டைல்
கெட்டுப் போகாம செய்யணும் என்று ஒர் பாணி எடுத்தேன்.
அதற்கு எனக்கு உதவிகரமாக இருந்தவர்கள் மாஸ்டர் தனபால்,
சீனிவாசலு . அந்த இடத்தில வந்து என்னுடைய பாணி
மாறுபட்டு நான் மாடர்ன் சிற்பி ஆனேன். அப்ப புதுமையான
சிற்பங்கள் என்று வரும் போது அதிலேயும் இந்த
பாரம்பரியத்தோட பின்புலம் எனக்கு இருப்பதினால் இந்தப்
பழமையை ஏன் புதுமையாய்ச் செய்ய கூடாது என்ற எண்ணம்
ஏற்பட்டு மரபில் புதுமையை செதுக்கிப் (Frontal relief)
பார்த்தேன்.''
படிக்கும் போதே உங்களுக்கு இந்த சிந்தனை இருந்ததா?
'' ஆமாம். என்னுடைய மூத்த மாணவர்களுடைய பாதிப்பு
எனக்கும் வரும் இல்லையா... என்னுடைய மூத்த மாணவர்கள்
எல்லோரும் பெரிய ஆட்களாகத் தான் இருக்கிறார்கள்.
என்னுடைய நண்பர் கொணி ராமன் என்பவர். இன்று மலம்புழா
அணையில் 'யட்சணி' என்ற பெரிய சிற்பத்தைச் செதுக்கியவர்,
என்னுடன் நெருங்கிப் பழகியவர். அப்புறமா, ஓவியம்,
சிற்பம், விளம்பர ஓவியம் என்று மூன்று துறைகள் இருந்தது
அல்லவா? அந்த மூன்று துறையிலும் என்னுடன் படித்தவர்கள்
எல்லாம் இன்று பெரிய ஆளாகத் தான் இருக்கிறார்கள்.
கானகோணி ராமனும் அதில் ஒருவர். மற்றவர்கள் எல்லாம்
கல்லூரி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அப்புறம் பெரிய
இடத்தில எல்லாம் இருக்கிறார்கள்.''
அப்பொழுது தான் உங்களுக்கு மரபு வடிவத்தில் உள்ளதை
நவீன வடிவமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றிற்றா?
''நவீனம் என்பதைப் பார்க்கிறவர்கள் தான்
சொல்லுகிறார்கள். நான் ஏதோ புதுமையாய்ப் பண்ணுகிறோம்
என்று தான் நினைக்கிறேன். பார்க்கிறவர்கள் தான்
சொல்லுகிறார்கள். அதற்கு அந்த பாணி வந்திருக்கு..''
உங்களுக்குப் புதுசாச் தெரியலையா? ஏற்கனவே ஒரு
முப்பரிமாணத்துல solid ஆக இருப்பதை எடுத்துவிட்டு...?
''ஒரு
தட்டையான தகடு என்கிற இரு பரிமாணத்தை வைத்து
முப்பரிமாணத்துல சிற்பமாகக் கொண்டு வந்து காட்டினது
நான் ஒருவன் தான் 1964 -ல. அதற்கு அப்புறம் தான் என்
சக நண்பர்கள் எல்லாம் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். அது
வந்து ஒரு பெரிய வரலாறு . I am the father of the
sheet metal work in Madras College of Arts என்று
சொல்வேன். இந்தப் புத்தகத்தில... பணிக்கருடைய மகன்
நந்தகோபால் கூட சொல்லியிருக்காரு, வித்யா சங்கர் -ல்லையின்னா
sheet metal வந்திருக்காது என்று.''
மெட்டலில் சிற்பங்கள் செய்ய உங்களுக்குத் தூண்டுகோலாக
யார் இருந்தார்கள்?
'' அதாவது மாடலிங் sculpture படிப்பு முடித்துவிட்டு
நான் மேல் படிப்புக்கு வரணும் என்று ஆசைப்படும் பொழுது
பணிக்கர் வேண்டாம் என்று தடுத்து விட்டார். மேல ஆறு
வருஷம் படிக்கணும் என்ற போது திரும்பி நான் டிகிரி
எடுக்கிறேன் என்றேன். பணிக்கர் வந்து, இது போதும் இந்த
லைனுக்கு மாறு' என்றார். நான் படிக்கும் பொழுதே ஒரு
வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தேன். அது எனக்கு ரொம்ப
விரோதமாகப் போய்விட்டது. 'நீ
படிச்சிக்கிட்டிருக்கும்போதே அப்ளிக்கேஷன் போட்டிருக்கே,
நீ இன்னும் ஆறு வருஷம் படிக்கணும் என்று எண்ணும் போது
நடுவில வேலை வந்தால் விட்டு விட்டு ஓடிப் போயிடுவ...
அதனால் நான் உனக்கு ஐந்து வருட, ஆறு வருட படிப்பு
எல்லாம் கொடுக்க மாட்டேன். நீ படித்தா மெட்டல் ஒர்க்
படி. நீ இன்னும் improve பண்ணணும் என்று சொன்னார்.'
கொஞ்சம் வற்புறுத்தினார். அப்புறம் யோசனை செய்து டபுள்
ப்ரோமோஷன் எல்லாம் தரேன் என்று சொன்னார்.
அப்புறம் மூணு வருசப் படிப்பை இரண்டு வருசத்தில
படிப்பதற்கு என்ன வலிக்கவா செய்யும் என்று தோணிச்சு.
அப்புறம் அவர் சொன்னார், 'நீ ஏன் மெட்டல்-ல செய்யக்
கூடாது என்று கேட்டார்? உனக்கு எல்லா சுதந்திரமும்
தரேன்' என்றார். நான் சொன்னேன் 'சார் அங்க போனா சட்டி,
டம்ளர், குண்டான், பன்னீர் சொம்பு அது தான் சார்
அடிக்கச் சொல்லுவாங்க, எனக்கு அது பரம்பரைத் தொழிலு.
எனக்கு இந்த வேலை எல்லாம் தெரியும். போயும் போயும்
இதுக்கு எதுக்கு எனக்கு டிப்ளமோ' என்றேன். 'இல்ல இல்ல
நீ போய்ப் படி. நான் உனக்கு சுதந்திரம் எல்லாம்
கொடுக்கிறேன். நீ இதெல்லாம் செய்' என்று சொன்னாரு.
அதுக்கு அப்புறம் அதிலே போயி ஜாயின் பண்னினேன்.
இவ்வளவு
பாரம்பரியம் கொண்ட நீங்கள் எப்படி நவீன சிற்பியாகப்
பரிணமிக்க முடிந்தது? முதன் முதல்ல உங்கள் சிற்பத்தை
சரியாக அடையாளம் கண்டு அங்கீகரித்தது பணிக்கர் தானா?
உங்கள் முதல் அனுபவம் சிறப்பா எதில வெளிப்பட்டது?
'' முதல்ல நான் செய்த 'பானை ஏந்திய பெண்' (A lady with
a pot) என்ற ஒரு சிற்பம். இந்த சிற்பத்தைச் செப்புத்
தகட்டுல இரண்டு பரிமாணத்தில் செய்யப்பட்ட சிற்பம்
மூன்று பரிமாணத்தோட காட்சி அளிக்க கூடியதாக இருந்தது.
அந்த அளவிற்கு Project பண்ணி முதன் முதலா செய்தேன்.
இந்தச் சிற்பம் இந்தக் கல்லூரியோட முதல்வர் கே.சி.எஸ்.
பணிக்கரால் பாராட்டுப் பெற்றது. அப்ப எனக்கு மாணவப்
பருவம். எனக்கு சிறந்த கலைஞானம் எல்லாம் இல்லாத
சூழ்நிலை.... அந்தக் காலத்தில முதல்வர்களைக் கண்டாலே
மாணவர்கள் கொஞ்சம் பயந்து மரியாதை செலுத்தக் கூடிய
காலம் அது. இந்தக் கால கட்டம் போல அல்ல அது. நான்
சொல்வது கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து
வருடங்களுக்கு முன்பு. பணிக்கர் என்றால் முதல்வர் என்ற
கண்ணோட்டத்தோடு, கொஞ்சம் பயத்தோடு தான் பார்ப்போம்.
அணுகுவோம். அவரால் பாராட்டப்பட்டது இந்த சிற்பம்.
அடுத்தபடியாக நான் ஒரு சிற்பம் பண்ணினேன். இந்த சிற்பம்
வந்து அதே மாதிரி பரிணாமத்தில் ஓர் Mourner. Mourner
என்றால் வருத்தம் என்று சொல்லலாம், இல்லை வெட்கம்
என்றும் சொல்லலாம். அந்த உணர்ச்சிகளை முகத்தில் தேக்கி
நின்ற நிலையில் ஓர் பெண் வருத்தப்படுகிற மாதிரி
பண்ணினேன். அதற்கு அவார்ட் கிடைத்தது.''
பொதுவாகப் பெண்களை சிற்பமாக வடிப்பது என்பது உங்கள்
ஆதர்சக் கொள்கையா ?
''என்னுடைய தகப்பனார் சிற்பக்கலையிலும், சிற்ப
சாஸ்திரத்திலும் மகா வல்லவர். அவரைத் தேடி, அவரிடம்
தகவல்களை அறிந்து கொள்வதற்காகப் பல பெரிய மனிதர்களும்
வருவார்கள். என்னுடய தந்தை சொல்வார், சிற்பத்துக்கு
ஏற்ற வளைவு நெளிவுகள் அதிகம் பெண்ணிடம்தான் இருக்கிறது
என்று . அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
அதையெல்லாம் நவீனப்படுத்தி நான் கொடுக்கிறேன். அதாவது
தமிழ் மொழி எப்படி தொல்காப்பியர் காலத்திலிருந்து
கொஞ்சங்கொஞ்சமாக மாறி பல மாற்றங்களைப் பெற்ற மொழியாக
இன்று மாறியிருக்கிறதோ, அதைப் போல.
உங்களுடைய
சிற்பங்களில் உங்கள் மனதுக்குப் பிடித்தது எது ?
''மங்கை சீரிஸ் என்று நான் செய்த அத்தனை சிற்பங்களும்
என் உள்ளத்தைத் தொட்டவைதான். ரொம்ப நல்லா
பண்ணியிருந்தேன். அது ரொம்ப புதுமையான அப்ரோச். அது
பஞ்சாப் நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
நவீன சிற்பங்களைப் பற்றி பேசும் பொழுது இந்த space
ரொம்ப தேவை. இந்த space ஐ வைத்துத்தான் இந்தசிற்பத்தைப்
பார்க்க கூடிய இடத்தைப் பொறுத்து இருக்கு. நான் வந்து
இன்னும் அழகாகச் சொல்ல வேண்டும் என்றால் I am inspired
by myself & in the traditional pieces of world
monumental sculptures. அதாவது எந்த இடத்தில நான் காலடி
எடுத்து வைத்து.... எந்த கோயிலுக்குள் நுழைந்து
போனாலும் கூட ஒரு துண்டு உருவத்தை வைத்து ஒரு முழு
உருவத்தைப் பார்க்கக் கூடியவன். அந்த ஆற்றல் அந்த
சக்தியை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கான்.''
மேற்கத்தியக் கலைஞர்களின் பாதிப்பில் ஏதாவது சிற்பங்கள்
செய்திருக்கிறீர்களா?
'' நான் வந்து முற்றிலும் இந்தியன். இந்திய சிற்பியாக,
இந்தியப் பாரம்பரியத்தில் அந்த சிற்பக் கலையைப்
புதுமையான வடிவத்தில் அனுமதித்தவன். இதை ஏன்
அயல்நாட்டுக்காரன், ஐரோப்பாக்காரன் வந்து பார்த்து
Inspire ஆகக் கூடாது என்று பார்த்து முழுமையான
எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை என்னுடைய சிற்பங்கள்.
அதில் மேலை நாட்டுக் கலாசாரத்தைக் கொஞ்சம் கூட கொண்டு
வருவதற்கு எனக்குப் பிடிக்காது. நான் இந்தியன் என்று
மட்டும் சொல்ல மாட்டேன்..... நான் ஒரு தமிழன்.....
காவிரி நதிக்கரையில உள்ள இந்த சுவாமி மலை
பாரம்பரியத்தில இருக்கக் கூடிய சுத்தமான ஸ்தபதி
குடும்பத்திலேர்ந்து வந்ததால்தான், ஐரோப்பிய
சிற்பங்களையோ, மேற்கத்திய சிற்பங்களையோ நான்
பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணவே இல்லை. நம்ம
நாட்டினுடைய பாணி, நம்ம நாட்டினுடைய கலாச்சாரம்,
சம்பிரதாயம் அனைத்தையும் சிற்பத்தில் சொல்லப்பட
வேண்டிய ஓர் பொருளாக இது வரையிலும் வடிவமைத்துக்
கொண்டிருக்கேன். அந்த கலாச்சாரத்திலேயே மாறுபட்ட
கலாச்சாரங்கள் இருக்கு. அனைத்தையும் ஒன்று
சேர்ப்பதுதான் கலை. கலை மூலமாக மற்ற நாடுகளோடு இணைப்பு
வைத்துக் கொள்ள முடியும். அதுல வெற்றிப் பாதையிலும்
வந்துட்டேன். இன்னும் அதைத் தான் பண்ணிக்
கொண்டிருக்கேன்.
என்னுடைய மாணவப் பருவத்திலேயே மாணவர்களோடு வாக்குவாதம்
செய்து கொண்டிருக்கும்போது நாங்க -ந்தியக் கலை என்றால்
என்ன? classical art என்றால் என்ன? இந்த மாதிரி
சர்ச்சைகள் பண்ணுவோம். சர்ச்சைகளை உருவாக்க முடிந்தது.
என்னுடைய
சிற்பங்களில் 'விருக்ஷ்சிகா' என்பது தான் உயர்ந்த
சிற்பம். இந்த மாதிரி பல கருத்துகளை அடிப்படையில கொண்டு
ஒரு மூலக் கூறுகள்..... ஒரு basic எல்லாம் அடிப்படையா
எடுத்துக்கிட்டு வடிவமைப்புகளைப் புதுமையான முறையில்
செய்திருந்தேன். அதில கூட மற்ற நாட்டினுடைய
வடிவமைப்புகளோட ஒப்பிட்டுப் பண்ணவில்லை. என்னுடைய
சொந்த வடிவமைப்புல கொண்டு வந்து கம்போஸ் பண்ணுகிறேன்.
நான் ஆரம்பத்திலேயே அதை வெறுத்தவன். அதாவது இங்கு
இருக்கிற நடராஜர் சிலை லண்டனுக்குப் போனா அது
தமிழ்நாட்டு சிற்பம் என்று சொல்லுகிறான். ஆனால்,
லண்டனிலிருந்தோ, நியூயார்க்கிலிருந்தோ வீனஸ் சிலையைக்
கொண்டு வந்தால் -ங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அது
யாராவது படித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
படித்தவர்கள் சொன்னால்தான் தெரியும்.
இதற்கெல்லாம் கலை தான் அடிப்படை என்கிறீர்களா?
'' கலை என்று சொல்வது வந்து ஓர் ஓவியத்தை ஒரு கோடு
கிறுக்கினா அந்த ஒவியத்திற்கு இன்று பலவிதமான
குறீயிடுகள் கொடுக்கிறார்கள். இது நேர்கோட்டு ஒவியம்,
குறியீட்டு ஒவியம், வளைவு ஒவியம் இந்த மாதிரியான ஒவியம்
என்று அந்த ஒவியத்தை ஒவ்வொரு வழியாகப் பார்க்கிறாங்க.
இப்படி ஒவ்வொரு கோட்டுக்கும் ஓர் அர்த்தம் கொடுக்கக்
கூடிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கும்
அடிப்படை இருக்கு. இதற்கு என்ன சொல்கிறீங்க நீங்க...'' |