| |
|
மனம் போல் |
கவிதை
|
|
சேஷாத்ரி |
|
சிறுவர்கள்
பட்டம்விட்டுக்
கொண்டிருந்தனர்
ஒரு சிறுவனின்
பட்டத்தை தவிற...
எழும்பி
பறக்கத்தொடங்கியது...
எல்லா பட்டமும்
அவன் விடத்தெரியாமல்
கிழித்துவிட்டான்...
அவனை சுற்றிலும்
மகிழ்ச்சியின் ஆரவாரம்
அவன் மட்டும்
ஓர் அமைதியின்
மெளனத்தில்
விருப்பமில்லாமல்
விடவந்தான்..
அவன் வருந்தவில்லை...
சலிப்பில்லாது
தெளிவான
நம்பிக்கையிடன்..
அந்த பட்டத்தை
தன் கைக்கெட்டிய தூரம்
உயர்த்தி பிடித்துக்
கொண்டான்...
அதை அநார்ந்து பார்த்து
வானதில் பறப்பதாகவே
நினைத்துக் கொண்டான்.
அடிப்பட்டத்தின் வால்
சலனமில்லாமல்
காற்றிலாடிக்
கொண்டிருந்தது.
உலகில் அனைவரையும்
நல்லவராகவே பார்த்த
தர்மரின் பார்வையை
போல்...
அவன் உள்ளம்
மகிழ்ச்சியை
தொட்டுக் கொண்டது.
ஆகாய கனவுகளுடன்
எதார்த்த சாலையில்
நடக்கத் தொடங்கினான்
ஒரு யாத்திரையில்
சிரெத்தையோடு
அந்த இடத்தை விட்டு
புறப்பட்டான்.
வேறோரு பட்டத்தை
நினைத்தல்ல
வேறோரு வானத்தை
எதிர்பார்த்து. |
|
தொகுப்பு |
Published
on 13th March, 2008 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|