தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சுயம் போற்றி கவிதை
சேஷாத்ரி  
மனம்
அலைதலுக்குட்பட்டது
விழி
தேடுதலுக்குட்பட்டது
இதயம்
ஈர்த்தலுக்குட்பட்டது
மனிதன்
மனிதனுக்குட்பட்டவன்
ஆதலால்
வாழ்க்கைப்
போருக்குட்பட்டது

மூளை கனக்கும்
போது
இதயத்தில்
இறக்கிவை..
இதயம்
கனக்கும் போது
மூளையில் ஏற்றிவை..

மனமே..
கவிதை
எழுதும்போது
மட்டும்
நீ கனிந்திருந்தால்
போதும்..
மனிதனை
படிக்கையில் நீ
கல்லாகிவிடு..

நீ ஈரமாய் இருந்தால்
மற்றவர் தாகத்துக்கு
உலர்ந்திருந்தால்
மற்றவர் கால் ஈரம்
உன்னில் துடைக்கப்படும்..

இச்சமூகம் உன்னை
வேடிக்கைப்பார்த்துக் கொண்டே
இருக்கும்..
பிடித்தால் திருஷ்டிக் கழிக்கும்
பிடிக்காவிட்டால் கல்லடிக்கும்

இந்தப் பண்டிகைக்கு
எடுத்த புத்தாடை அடுத்தப்
பண்டிகைக்கு
பொழிவிழப்தைப்போல் தான்
உறவுகளும்..
உன் அடுத்த பருவத்தில்
இந்த பருவத்தின் சில உறவுகள்
கிழியலாம்... கலங்காதே...

உன்னைச் சுற்றி
ஆழி அமை..
எந்த ஒரு உணர்வும்
உன் மீது படையெடுக்கக்
கூடாது..
உன்னைக் காத்துக்கொள்..

யாருக்காகவும் ஏங்கி
நீ விடும்
ஒரு சொட்டுக்கண்ணீர் கூட
உன் உயரங்களை
அழித்துச்செல்லும் பேரலையாகும்..

சாக்கடையில் தான்
அடைப்புகள் இருக்கும்..
சமுத்திரத்தில் இருக்காது
நீ சாக்கடையா? சமுத்திரமா?

விழுவதெனில்
உன் காலில் விழு
நீ தான் உயர்ந்தவன்..

எழுவதெனில்
உன் கைப்பிடித்தே எழு
உன் கைதான் உனக்குதவி..

கைக்குட்டையை நழுவவிடுவதைப்
போல்
உன் கவலைகளைத் தொலைத்துவிடு..
சட்டைப்பையில் பேனாவைபோல்
மகிழ்ச்சியை என்றும்
உன் நெஞ்சோடு வை..

நாளைச் சூரியன்
மலைகளுக்கு மத்தியில் உதிக்காது..
உன் தோள்களுக்கிடையில்
உதயமாகும்...

தொகுப்பு Published on 28th Dec, 2007
 


மேலும்