For Tamil Fonts
 அஞ்சலி
 சிறப்புப்பார்வை
 சிறப்புக் கட்டுரை
 அரசியல்
 சமூகம்
 இலக்கியம்
 கலை
 ஆன்மீகம்
 இயற்கை மருத்துவம்
 நேர்காணல்
 விருந்தினர் பக்கம்
 திட்டிவாசல்
 சினிமா சினிமா
 முகப்பு
 கடந்த பகுதிகள்



தெற்காசிய நாடுகளின் பெண்குழந்தைகள்
பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்களின் முகம் வாடித்தான் போகிறது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லத் துணிகிறாள் என்றால், சமூகத்தில் பெண் பிள்ளைகளின் மதிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

புதுமை செய்த பாரதி
எதிரொலி விசுவநாதன்

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவருடைய தம்பியாய் - தாசராய் - தொண்டராய் - நண்பராய் - பதிப்பாசிரியராய்த் திகழ்ந்தவர் பரலி சு. நெல்லையப்பர் ஆவார். அத்தரு பரலி சு. நெல்லையப்பரின் மாணவராக விளங்கிப் பாரதி புகழ் பரப்பும் நற்பணியைச் செய்து வருபவர் எதிரொலி விசுவநாதன்.மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டொன்றின் கவிநயத்தை இந்தக் கட்டுரையில் பழம் பாடலொன்றோடு ஒப்பிட்டுக் காட்டி அற்புதமாக இவர் இங்கே விளக்குகிறார்.

காதலர் தெய்வமெனப் போற்றப்படும் மன்மதனின் வில் கரும்பாகும். அம்புகள் ஐந்த மலர்களாகும். அவை தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை என்பவையாகும்.

மன்மதனின் மலர்கனைகள் ஐந்தும் பட்டு விரகதாபத்தால் துடிக்கிறாள் ஒரு பருவ மங்கை. தாமரை என்ற அரவிந்த மலர் அம்ப மன்மதன் முதலில் அவள் மேல் வீசியதால் காதலனைப் பற்றிய இனிய நினைப்பு அவளுக்கு வந்துவிடுகிறது.

''கனவு கண்டதிலே - ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் இனம் விளங்கவில்லை - எவனோ என் அகம் தொட்டுவிட்டான்!''

அடுத்து இரண்டாவது முல்லை மலர் அம்பை மன்மதன் அவள் மேல் வீச, அது காதலன் பற்றிய நினைவை மீண்டும் மீண்டும் எழுப்பி அவளைக் காதல் பைத்தியமாக்கிவிடுகிறது. காதலனைப் பிரிந்திருக்க முடியாத நிலையில் அவள் குழம்பிப் போய் விடுகிறாள்.

''குணம் உறுதி இல்லை - எதிலும் குழப்பம் வந்ததடீ கணமும் உள்ளத்திலே - சுகமும் காணக் கிடைத்ததில்லை!''

மூன்றாவது அம்பாகிய அசோகமலரை மன்மதன் அவள் மேல் வீச அவள் உணவு உறக்கமின்றி காதலன் வருகையை எண்ணி ஏங்குகிறாள்.

''உணவு செல்லவில்லை - சகியே உறக்கம் கொள்ளவில்லை மனம் பிடிக்கவில்லை!''

''பாலும் கசந்ததடி - சகியே படுக்கை நொந்ததடீ கோலக் கிளிமொழியும் செவியில் குத்தல் எடுத்ததடீ!''

நான்காவதாக மன்மதன் அவள் மேல் மாம்பூ அம்பைக் கரும்புவில்லில் தொடுத்து வீசுகிறான்.

அது காதலன் நினைவில் பித்துப் பிடித்த மாதிரி இருக்கின்ற அவளைப் பெரிதும் மோகம் கொள்ளச் செய்துவிடச் செய்துவிடுகிறது. பிரிவுத் துன்பமாகிய பசலை நோய் அவள் மேனியில் ''பாயின்மிசை நானும் - தனியே படுத்திருக்கையிலே தாயினைக் கண்டாலும் - சகியே சலிப்பு வந்ததடீ!

கடைசியாக அதாவது ஐந்தாவது அம்பாக 'மன்மதன்' நீ லோத்பலம் என்கின்ற குவளை மலரைத் தனது கரும்பு வில்லில் பூட்டி அவள் மேல் வீச - அவள் விரகதாபத்தால் என்ன செய்வதென்று புரியாமல் காதலன் நினைவில் செத்துச் செத்துப் பிழைக்கிறாள்.

''நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புதற்கில்லை என்றார் : பாலத்துச் சோசியனும் - கிரகம் படுத்தும் என்று விட்டான்!''

இப்பொழுது மன்மதனின் மலர்கணைகள் ஐந்தும் பட்டு விரகதாபத்தல் வாடும் காதலியின் நிலையைப் பற்றிப் பாரதியார் பாடிய கண்ணன் பாட்டுத் தொகுதியில் உள்ள பத்தாவது பாடலை முழுவதும் படித்துப் பாருங்கள்.

''தூண்டில் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சந் துடித்ததடீ!''

''கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்: வேண்டும் பொருளை எல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ!''

காதலனான கண்ணனை எண்ணி எண்ணிக் காதலி படும் விரகதாபத்தைக் கண்முன் காண்கின்ற தொலைக்காட்சித் தொடர் சித்திரங்கள் போல், எத்தனை எளிமையாக எத்தனை நயமாக தமது பாட்டில் பாரதி காட்சிப்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்து ரசித்துப் பாருங்கள்.

இதே கருத்தை அதாவது காதலனை நினைந்து ஏங்கும் காதலி ஒருத்தியின் மோகவயப்பட்ட பல்வேறு காட்சி நிலைகளை ஒரு பழைய வெண்பாவும் எடுத்துச் சொல்கிறது.

''நினைக்கும் அரவிந்தம் நீள்பசலை மாம்பூ அனைத்துணவும் நீக்கும் அசோகம் - வணத்திலுறு முல்லை கிடைகாட்டும் மாதே முழுநீலம் கொல்லு மதன் அம்பின் குணம்!''

மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளோடு இந்தப் பழம் பாடலின் பொருள் விளங்காத பாடல் வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது -

மகாகவி பாரதியின் பாடல் எளிமையும், காட்சி அருமையும், கவிதை மகத்துவமும், புதுமைப் பொலிவும் நமக்கு நன்க புரிகிறதல்லவா?

பாட்டுச்சுவை சேர்த்த பாரதியார் தோன்றாவிட்டால் சொல்லுடைக்கச் சுத்தியலைத் தேடி வேண்டிய அவலநிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கும்.

வாழ்க பாரதி

தொகுப்பு