தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சினிமா செய்திகள் சினிமா செய்திகள்
கேடிஸ்ரீ  
மீண்டும் மு.க. முத்து!

'பூக்காரி' படத்தில் தொடங்கி 'பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்', 'அணையாவிளக்கு' என்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தவர் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் தனது கணீர் குரலில் பாடவும் செய்திருக்கிறார் மு.க. முத்து. இவரின் 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா', 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப ஧பருங்க..'' அந்த காலத்து ஹிட் பாடல்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 வருடங்களுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இந்த 'பிள்நளயோ பிள்ளை' நாயகன்.

பவித்ரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'மாட்டு தாவணி' என்ற படத்திற்காக தேவா இசையமைப்பில் கிராமியப் பாடல் ஒன்றை தன் கணீர் குரலினால் பாடி பதிவு செய்து இருக்கிறார் மு.க. முத்து.

அப்பாவின் ஆசியுடன் பாடல் பதிவிற்கு வந்த மு.க. முத்து, 20 நிமிடத்திற்குள் பாடலை பாடி பதிவு செய்ய வைத்தது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.இதற்கிடையில் இயக்குநர் ராஜசேகர் படத்தில் அப்பா வேடம் ஒன்றில் நடிக்கவும் மு.க. முத்துவை அணுகியிருப்பதாக தெரிகிறது.

மதுரை மாட்டுத்தாவணியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள், அங்கு பிழைப்பு நடத்தும் இளைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கைப் பற்றி சொல்லும் கதையே 'மாட்டு தாவணி'.

தசாவதாரத்தில்' அரசியல் தலைவர்கள்!

கமலின் 'தசாவதாரம்' பற்றி தினம் தினம் ஒரு சுவையான செய்தி வந்துக் கொண்டு இருக்கின்றன.

அரசியலில் எதிரிரும், புதிருமாக இருக்கும் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா இருவரையும் 'தசாவதாரம்' படத்தில் சில காட்சிகளில் தோன்றும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள் என்பதுதான் இப்போதைய சுவாரசியமான தகவல்.

பிரம்மாண்ட தயாரிப்பான 'தசாவதாரம்' படத்தின் பத்து வேடங்களில் விஞ்ஞானி வேடம் ஒன்றும் வருகிறது. விஞ்ஞானி கமல் தன் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்ய, அதற்க஡ன பாராட்டு விழா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்வது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள்.

மேலும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவும் கமலும் ஹெலிகாப்டர் ஒன்றில் ஒன்றாக பேசிக் கொண்டே இறங்கி வருவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா என்று இரு தலைவர்களையும் படத்தில் இடம் பெற வைத்து எந்தவிதமான அரசியல் முத்திரையும் தன் மீது குத்தபடுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தான் பொதுவானவன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் கமல்.

சூர்யா நடிக்கும் 'அயன்'

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனான நடிக்கவிருக்கிறார் சூர்யா. படத்திற்கு பெயர் 'அயன்'. நாயகியாக நடிக்கிறார் தமன்னா.

'சிவாஜி' போல் மிகப் பிரமாண்டமான முறையில் தயாராகவிருக்கிறது 'அயன்'. பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் இப்படத்திற்கான வாசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை ஆகியவற்றை கவனிக்கிறார் சுபா.

'''அயன்' என்றால் கலங்கமில்லாதவன், மாசற்றவன் என்று பொருள்'' என்று படத்தின் பெயருக்கான காரணத்தை கூறுகிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.

எந்த சூழலிலும் தன் இயல்பு மாறாதவன் இப்படத்தின் நாயகன் என்று கூறும் ஆனந்த் 'அயன்' சூர்யாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் வெற்றி படமாக அமையும்'' என்கிறார்.

'அயனில்' முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபு.

செல்வா இயக்கத்தில் விஜயகாந்த், மாதவன்

'தோட்டா' படத்திற்கு பின்பு இயக்குநர் செல்வா விஜயகாந்த் மற்றும் மாதவன் ஆகியோரின் படங்களை இயக்கவிருக்கிறார்.

கனகரத்தினா மூவீஸ் ஆக்ஷன் படமொன்றை விஜயகாந்த் நாயகனாக நடிக்க தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை இயக்கவிருக்கிறார் செல்வா. அதே நேரத்தில் மாதவன் நாயகனாக நடிக்க முழு நகைச்சுவை படமொன்றை கேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்த இரண்டு படங்களையும் இயக்கவிருக்கிறார் செல்வா. அதற்கான வேலைகள் முழுமூச்சில் நடைப்பெற்று கொண்டு இருக்கின்றன.

தொகுப்பு March 28th, 2008
மேலும்