தமிழ்
 
 
 
சினிமா செய்திகள் சினிமா செய்திகள்
கேடிஸ்ரீ  
தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா!

பல்வேறு யூகங்களுக்குப் பிறகு 'தசாவதாரம்' படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் விழாவிற்கு உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்ககிசான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளவிருக்கிறார். இவருடன் பல்வேறு முக்கிய கலைஞர்களும் விழாவிற்கு வருகை தரவிருப்பது சிறப்பு செய்தியாகும்.

'தசாவதாரம்' படத்தின் இசையை வெளியிடும் உரிமையை சோனி பிஎம்ஜி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படமாகிறது 'பசும்பொன் தேவர் வரலாறு'

பசும்பொன் தேவர் அவர்களின் வரலாறு திரைப்படமாகவிருக்கிறது. விளம்பரத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற இ.பா. கார்த்திகேயனின் 'பாப்பிலான் கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் முயற்சியில் உருவாகியுள்ளது 'பசும்பொன் தேவர் வரலாறு'. இப்படத்தை தயாரித்து அளித்திருக்கிறார் கா. கலைச்செல்வி.

தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற பல்வேறு முன்னணி நாளிதழ்கிளிலும், பல்வேறு வார இதழ்களிலும் பணியாற்றிய மா.ப. ஆபிரகாம்லிங்கன் படத்திற்கு தேவையான பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்து தொகுத்து வழங்கியிருப்பது மட்டுமல்லாமல் படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.

பசும்பொன தேவர் விடுதலைப் போருக்கு ஆற்றிய மாபெரும் பணிகளை பல்வேறு காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. பசும்பொன் தேவரின் இளவயது வீடியோ ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லாததால் அவரின் புகைப்படங்களை கொண்டு, மிகப் பெரிய பொருட்செலவில் அனிமேஷன் மற்றும் 3டி கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கி தத்ரூபமாக காட்சிகளை படமக்கியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

சுமார் ஒரு மணி 15 நிமிடங்களுக்கு திரையில் ஓடக்கூடிய இப்படத்திற்கான பாடல்களை கவிஞர் யுகபாரதி இயற்ற, பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமத்திருகிறார். நடிகர் வாகை சந்திரசேகர் பின்னணி குரல் தந்துள்ளார்.

'பசும்பொன் தேவர் வரலாறு ' படப்பிடிப்புகள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, உறையூர், தஞ்சாவூர், வேலூர், கல்லுப்பட்டி, புளிச்சிக்குளம் என பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்ந்த - சென்ற இடங்களில் எல்லாம் நடைப்பெற்று வருகிறது. பசும்பொன் தேவரால் கட்டப்பட்ட ஐமுக விநாயகர் திருக்கோயிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் முருகதாஸ் கைது!

வளர்ந்து வரும் இளம் இயக்குநர் முருகதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக விசாரணைக்காக அழைத்துச் சென்றது சினிமா வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றார் முருகதாஸ். அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வந்த போது காவல்துறையினரால் விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் காவல்துறையினரிடம் முருகதாஸ் பற்றி கொடுத்த ஒரு புகாரே இதற்கு காரணம் என்று தெரிகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கஜினி' படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர். அப்படத்தில் இயக்குநனராக பணியாற்றினார் முருகதாஸ்.

இந்நிலையில் 'கஜினி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்தி கஜினியையும் இயக்குகிறார் முருகதாஸ்.

ஹிந்தியில் ரீமேக் செய்தவற்கு முன்பு தன்னிடம் கலந்தோலசிக்கவில்லை என்றும், அதற்கான தனது பங்கை கொடுக்கவில்லை என்றும் முருகதாஸ் மேல் சேலம் சந்திரசேகர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக முருகதாசை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது சமீபத்திய செய்தியாகும்.!

விஜயகாந்திற்கு மறுப்பு! விசாலுக்கு அனுமதி!

விஜயகாந்த் நடிக்கும் 'அரசாங்கம்' படத்திற்காக சென்னை விமானநிலையத்தில் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்தார் படத்தின் இயக்குநர் மாதேஸ். அதற்காக அனுமதி கேட்டு சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்து, அனுமதிக்காக காத்திருந்தார். காத்திருக்கிறார்.

இதே நேரத்தில் நேரத்தை வீணாக்காமல் மும்பை விமானநிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக் கேட்டு மனு ஒன்றை அளித்தார் மாதேஸ். ஆச்சர்யப்படும் விதமாக மும்பை விமானநிலையத்தில் படப்பிடிப்பு நடத்த உடனடியாக அனுமதி கிடைத்தது.

இதற்கிடையில் விசால் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக சென்னை விமானநிலையத்தில் அனுமதி கேட்கப்பட, அதற்கு அனுமதியும் உடனடியாக வழங்கப்பட்டது. படப்பிடிப்பும் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியது.

விஜயகாந்தின் 'அரசாங்கத்திற்கு' சென்னையில் கிடைக்காத அனுமதி மும்பையில் கிடைத்தது.!

தொகுப்பு Published on 4th March, 2008
மேலும்