தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'மறு பிறவியை நம்பலாமா?' சினிமா செய்திகள்
செ.பா  
'வைத்தீஸ்வரன்' சரத்குமார் - மேக்னா நாயுடு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங் என்று அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் ஆர் கே வித்யாதரன். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மனிதனுக்கம் ஒரு மறுபிறவி உண்டு என்பார்கள். அப்படியாகப்பட்ட மறுபிறவி உண்டா? இல்லையா? என்பதுதான் வைத்தீஸ்வரன் படத்தின் கதை. மறுபிறவியை நம்பாத மனோதத்துவ டாக்டர் சரத்குமார். ஆனால் கதைப்படி அவர்தான் மறுபிறவி. ஏடு, ஓலைச்சுவடி, நாடி ஜோதிடம் இவற்றிற்கு பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலிருந்துதான் இக்கதை தொடங்குகிறது. அதனால்தான் படத்திற்கு இந்த தலைப்பு. வழக்கமான மறுஜென்ம கதைகளில் பழிவாங்கும் பார்முலா இருக்கும். ஆனால் அதிலிருந்து முழுவதும் மாறுபட்ட கதை இது. டிவி சேனல் நிருபராக மேக்னா நாயுடு நடித்துள்ளார். வில்லனாக ஷயாஜி ஷிண்டே கலக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸ்வரை ஹீரோ சரத்குமாரும், வில்லன் ஷயாஜி ஷிண்டேவும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். இது உண்மையிலேயே புதுமையாக இருக்கும்.

தொகுப்பு Published on 20th Feb, 2008
மேலும்