புதுமுகங்களை
நாயகன், நாயகியாக வைத்து 'வேள்வி' என்கிற படத்தை இயக்கி
வருகிறார் புதுமுக இயக்குநர் ஜீன்ஸ். சாஃப்ட்வேர்
இன்ஜினியரான இவர், அமெரிக்காவில் டைரக்ஷன் பயிற்சி
முடித்துவிட்டு, கோடம்பாக்கம் வந்து இரண்டு
குறும்படங்களை இயக்கி, தன் திறமை என்ன என்பதை சின்ன
அடையாளமாக காட்டியுள்ளாராம். வேள்வி படத்தைப பற்றி அவர்
கூறியதாவது:-ஆணும் பெண்ணும் சமம் என்பது இன்றளவில்
வெறும் வார்த்தைகளால் மட்டுமே உச்சரிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பெண்கள் சமமாக மதிக்கப்படவில்லை
என்றால் பெண்களால் ஏற்படும் நிலை என்ன என்பதை சொல்லும்
புரட்சிகரமான படமாக இந்த 'வேள்வி' இருக்கும்.
தூய்மை, பரிசுத்தம் இவற்றின் அடையாளமாக
துளசி(செடி)யைச் சொல்லலாம். எந்த சூழ்நிலையிலும் அது
தன் தூயநிலையை மாற்றிக் கொள்ளாது. அதுபோலதான் இந்த
கதையின் நாயகி துளசியும் இயக்குநர் பாலசந்தர் படஙகளில்
சித்தரிக்கப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்கள் இன்றளவும்
மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருப்பதுபோல, 'வேள்வி'யில்
துளசி கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம்
பிடிக்கும். இந்த துளசி கேரக்டரில் புதுமுகம் ஹாசினியை
அறிமுகப்படுத்தியுள்ளேன். முதல் படமே அவருடைய சினிமா
வாழ்க்கைக்கு பலமாக அமையும். அவர் மட்டுமல்ல நாயகன்
விஷ்வா, காதல் சுகுமார், பாண்டு என அனைவரமே தங்கள்
கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். விரைவில்
படம் வெளிவர இருக்கிறது. பேசப்படக்கூடிய படங்களின்
வரிசையில் 'வேள்வி'யும் நிச்சயமாக இருக்கும் என
நம்பிக்கையுடன் தெரிவித்தார் இப்பட இயக்குநர் ஜீன்ஸ். |