தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
இளையராஜாதான் ஹீரோ சினிமா செய்திகள்
செ.பா  
சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள், தங்களின் நண்பனின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அந்த கிராமத்தில் சந்திக்கும் புதிய அனுபவங்களைத்தான் 'கண்களும் கவிபாடுதே' படத்தின் கதை என்கிறார் இதன் இயக்குநர் கே சந்தர்நாத்.

இவர் ஏற்கனவே 'இதயவாசல்', 'ஆரத்தி எடுங்கடி', 'வீரபாண்டிக் கோட்டையிலே' போன்ற படங்களை இயக்கியுள்ளார். ரஜித், ஆகாஷ், ரத்தன் என மூன்று புதுமுகங்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லக்ஷனா, லிகிதா, மிருதுளா நடிக்கிறார்கள். கண்களும் கவிபாடுதே படத்தில் மூன்று ஹீரோக்கள் நடித்தாலும் படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜாதானாம். அந்த அளவுக்கு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் அற்புதமாக தந்திருக்கிறாராம்.

பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறாராம் இளையராஜா. பின்னணி இசையமைப்பதற்கு முன் படத்தைப் பார்த்த ராஜா முதல் நாள் இயக்குநரிடம் ஒன்றுமே கருத்து சொல்லாமல் கிளம்பி சென்றுவிட்டார். மறுநாள் பாக்கி காட்சிகளை பார்த்ததும் இயக்குநரை அழைத்து மனதார பாராட்டியது எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே ஜி ரங்கமணி.

இளைஞர்களை கவரும் வகையில் கண்களும் கவிபாடுதே என்ற கவித்துவமான தலைப்பில் உருவாகும் இப்படம் கண்டிப்பாக இளசுகளுக்கு மட்டுமில்லாமல் பெருசுகளும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் இதன் இயக்குநர் கே சந்தர்நாத்.

தொகுப்பு Published on 16th Feb, 2008
மேலும்