தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'காதலை நேசிக்கும் குடும்பம்' சினிமா செய்திகள்
செ.பா  
காதலுக்கு எதிர்ப்பே இல்லாமல் இருந்தால் காதலர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? பொதுவாக தங்கள் குடும்பத்தைத்தான் காதலர்கள் நேசிப்பார்கள். ஆனால் ஒரு குடும்பமே ஒரு காதலை நேசித்தால் எப்படியிருக்கும்? இந்த சின்ன கதைக்குருவை வைத்துதான், மகேஷ், சரண்யா மற்றும் பலர் கதையை உருவாக்கினேன் என்கிறார் அதன் இயக்குநர் பி வி ரவி. இவர் இயக்குநர் லிங்குசாமியிடம் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா போன்ற படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ள அனுபவம் உள்ளவர். இக்கதைக்கு பொருத்தமான ஹீரோ யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, டி வி-யில் தொட்டால் பூ மலரும் படத்தின் பாடல் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, அதன் ஹீரோ ஷக்தியின் மாடுலேஷன் இவரை மிகவும் கவர்ந்து விட்டதாம். உடனடியாக ஷக்தியின் அப்பா டைரக்டர் வாசுவிடம் இப்படத்தின் கதையை சொன்னவுடன், பிரமாதம் என்று ஒரே வார்த்தையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துவிட்டாராம். இதில் ந஡யகியாக காதல் சந்தியா நடிக்கிறார். மற்றும் கீர்த்தி சாவ்லா, டேனியல் பாலாஜி, வினோதினி. சுவாதி, கல்யாணமாலை மோகன் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் கலக்கப்பே஡கிறார்களாம்.
தொகுப்பு Published on 14th Feb, 2008
மேலும்