தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'ராயபுரம் கதை' சினிமா செய்திகள்
செ.பா  
வடசென்னை பகுதியில் மிகவும் பரபரப்பும், கொஞ்சம் பதற்றமும் நிறைந்த பகுதி 'ராயபுரம்'. முழுக்க முழுக்க இப்பகுதியை மையமாக வைத்து கொஞ்சம் கற்பனை கலந்த இக்கதையை படமாக்கி வருகிறோம் என்கிறார் இதன் இயக்குநர் ஏ ஜி திருவள்ளுவர். மேலும் அவர் கூறியதாவது.,

ராயபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்தான் ஒரு அமைச்சர். அரசியல்வாதிகளில் நல்லவர்களும் உண்டு. ஆனால் அந்தப்பட்டியலில் இவரது பெயர் இல்லை. தான் மட்டும் பாதிக்கப்படாமல் இருக்க சகல குற்றங்களையும் சர்வசாதாரணமாக செய்யக்கூடியவர். இவரை எதிர்த்து மீசையை முறுக்கிவிடவோ! சட்டையை மடித்துவிடவோ ஒருவனுக்கு தைரியம் இருக்குமெனில் அவன் நிச்சயம் ரவுடியாகத்தான் இருப்பான். அப்படிப்பட்ட நல்லவன் ஒருவன் வல்லவனாக மாறி அதிகாரத்தையும், சட்டத்தையும், துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சரையும் போலீஸ் அதிகாரியையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களையும் எதிர்த்து போராடி பின் வெற்றி பெறுகிறானா? அல்லது தோற்றுப்போகிறானா? என்பதை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில், இந்த கற்பனை கதையை படமாக எடுத்து வருகிறோம். வெங்கட் சரோ என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். ரூபிகா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிபிபு ராயபுரம் பகுதியில் எடுத்து படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பாடல் காட்சிகளை எடுத்துவர திட்டமிட்டுள்ளோம் என்றார் இப்படத்தின் இயக்குநர்.
தொகுப்பு Published on 12th Feb, 2008
மேலும்