|
திகில் படங்கள் எடுப்பதில் வல்லவரான தக்காளி
சி.சீனிவாசன், 'நாளைய மனிதன்', 'ஜென்ம நட்சத்திரம்', 'அதிசய
மனிதன்' ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார். ஒரு நீண்ட
இடைவேளைக்கு பிறகு 'சற்று முன் கிடைத்த தகவல்' என்ற
படத்தை இயக்கியுள்ளார். இதுபற்றி இவர் என்ன சொல்கிறார்....
பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள கனல்
கண்ணன்தான் இப்படத்தின் ஹீரோ. 'அம்முவாகிய நான்'
படத்தில் நடித்திருந்த பாரதி ஹீரோயினி விஜய் டி வி யில்
'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில் பல குரலில் பேசும்
சேது இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
கனல் கண்ணன் ஒரு மனநல காப்பகத்திலிருந்து தப்பி,
பாரதி தனியாக இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து
விடுகிறார். ஒரு பைத்தியத்திடம் மாட்டிக் கொண்ட பாரதி,
அவன் தன்னைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தில்
நடுங்குகிறாள். அந்த சமயம் சேது, போலீஸ் உடையில் வந்து
அவளைக் காப்பாற்றுவதாகக் கூறுகிறான். ஆனால் சேதுவின்
நடவடிக்கையிலும், உடையிலும் உள்ள மாறுபாடுகளை அறிந்த
கனல் கண்ணன், சேதுவை வீட்டைவிட்டு வெளியேற்றுமாறு
பாரதியிடம் கூறுகிறார். ஆனால் சேது அவனை சிறைக்கு
அழைத்துக் செல்வதாக கூறுகிறான்.
இவர்கள் இருவரிடமும் மாட்டிக் கொண்ட பாரதி, யாரை
நம்புவது எனத் தெரியாமல் தன்னைக் காப்பற்றிக் கொள்ள
போராடுகிறாள். பாரதி யார்? ஏன் அந்த வீட்டில் தனியாக
இருக்கிறாள். அவள் வீட்டில் உள்ளவர்கள் வந்து அவளை
அந்த இருவரிடமிருந்தும் காப்பாற்றுவார்களா?
ஏன், கனல் கண்ணன் பாரதியை கொல்ல வருகிறார்...சேது
யார்? உண்மையில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியா? பாரதியை
மனநோயாளி கனல் கண்ணனிடம் இருந்து காப்பாற்றுவானா? ஏன்
எதற்கு சேது அந்த வீட்டிற்குள் வந்தான்....?
இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமா? சிரிக்க வைக்கும்,
ரத்தத்தை உறைய வைக்கும் நிகழ்ச்சித் தொகுப்புகளுடன் "சற்று
முன் கிடைத்த தகவல்" என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை
வந்து பாருங்கள் என்றார் தக்காளி சி.சீனிவான். |