தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
விரிந்துவரும் "பூ" சினிமா செய்திகள்
(செ.ர)  
பிரபல நிறுவனமான "மோஸர்பேயர் எண்டர்டெய்ன்மென்ட்" தமிழில் பிரகாஷ்ராஜ் டூயட் மூவீஸுடன் இணைந்து, பிரிதிவிராஜ், கோபிகா நடிக்கும் வெள்ளித்திரை, பிரகாஷ்ராஜ், த்ரீஷா நடிக்கும் அபியும் நானும், முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் மயிலு உள்ளிட்ட மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சசியின் நேசகி சினிமாஸ் நிறுவனத்துடன் இநணந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

"பூ" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நோட்டிபுக் ஃப்ளாஷ் ஆகிய மலையாள வெற்றிப் படங்களில் நடத்த முன்னணி நடிகை பார்வதி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்.

நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பவர் எஸ் எஸ் குமரன். இவர் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர். சசியின் அனைத்து படங்களிலும் பாடல்களுக்கு அதி முக்கியத்துவம் இருப்பதால் எஸ் எஸ் குமரன் முக்கியமானவராக எதிர்பார்க்கப்படுகிறார். படத்தின் ஆறு பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனின் பிரபலமான சிறுகதையை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சசியிடம் கதையைப் பற்றிக் கேட்டால்...... மண்ணிற்குள் விதையாய் புதைந்து கிடந்தாலும், நீரின்றி வெயிலில் காய்ந்து கிடந்தாலும், புயல்காற்றில் ஒடிந்தே கிடந்தாலும் பூப்தையே இயல்பாய் கொண்டிருக்கிற இரு மனிதப் பூக்களின் கதை என்கிறார்.

பி ஜி முத்தையா என்கிற விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இவர் ரவி கே சந்திரன், ரவிவர்மன், ராஜரத்னம், கதிர் ,வர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்..

தொகுப்பு Published on 23rd Jan, 2008
மேலும்