'சிவாஜி'
வெற்றியைத் தொடர்ந்து சங்கர்-ரஜினி கூட்டணி மீண்டும்
இணையும் 'ரோபோ' பற்றியே தற்போது பரபரப்பாக திரைப்பட
உலகிலும், ஊடகங்களிலும் பேசப்படும் செய்தி.ஐங்கரன்
இண்டர்நேஷ்னல் மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி
நிறுவனமான ஈராஸ் மல்ட்டி மீடியா இணைந்து இப்படத்தை
தயாரித்து அளிக்கவிருக்கிறது. 'ரோபோ' தமிழ், தெலுங்கு,
ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராகிறது 'ரோபோ'.
படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பை கடந்த சில
நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில்
ஐங்கரன் இண்டர்நேஷ்னல் நிர்வாக இயக்குநரான
மாணிக்கவாசகர் அறிவித்தார்.
ரஜினிக்கு நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகி ஒருவர்
தேர்வு செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.
'ரோபோ'விற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஈரோஸ் மல்ட்டி மீடியா நிறுவனம் ஏற்கெனவே தேவதாஸ்,
முன்னாபாய் M.B.B.S., ஓம் சாந்தி ஓம், பார்ட்னர் போன்ற
பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து அளித்துள்ளது.
மேலும் திரைப்படம், ஸ்டூடியோ, தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் தயாரிப்பு, ஹோம் எண்டர்டெயின்மெண்ட், இசை
ஆல்பம் தயாரிப்பு மற்றும் திரையரங்குகளைப் பராமரிப்பது
என்று பல்வேறு விஷயங்களிலும் சிறந்து விளங்கி வருவது
குறிப்பிடத்தக்கது.
பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர்கள் ஷாருக்கான்,
ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை வைத்து பல படங்கள் தயாரித்த
பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. இதே போல் வெளிநாட்டில்
தமிழ்ப்படங்களை திரையிடுவதில் முத்திரை பதித்து
விளங்குகிறது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்.
'ரோபோ' படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு
முன்பு ரஜினி, இயக்குநர் பாலச்சந்தர் தயாரிப்பில், வாசு
இயக்கும் குறுகிய கால தயாரிப்பு படம் ஒன்றில்
நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் பொங்கல் முன்னிட்டு
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் சங்கர்
'ரோபோ' என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர் ஒன்றை
விரைவில் அறிவிக்கப் போவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வருகிறார் அக்பர்!
உருதுமொழியில்
மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'முகல் இ ஆசம்' (Mugal-E-Azam).
கடந்த 1960களில் இப்படம் 'அக்பர்' என்ற பெயரில்
ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.
ஹிந்தியிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு
தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த
வெற்றியை தமிழில் 'அக்பர்' பெறவில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'முகல் இ ஆசம்'
பாகிஸ்தானில் மீண்டும் திரையிடப்பட்டு ரசிகர்களின்
ஆதரவை பெற்றது. இந்நிலையில் சுமார் 40 வருடங்களுக்கு
மீண்டும் தமிழில் அக்பர் 'அனார்கலி' என்ற பெயரில் டப்
செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கிறது.
'அனார்கலி' பட வேலைகள் அனைத்தும் ஏ.வி.எம்.
ஸ்டூடியோவில் தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்றன.
சுவர்ணலதா, சித்ரா மற்றும் அன்பன்குத்தூஸ் ஆகியோரின்
இனிமையான குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படத்திற்கான இசையை ரூபன் ராஜ் அமைத்திருக்கிறார்.
மீண்டும் புதிய பொலிவுடன் தமிழக திரையரங்குகளில் உலா
வரவிருக்கிறது 'அனார்கலி'.
வளரும் 'யாரடி நீ மோகினி'
தனுஷ்
மற்றும் நயன்தாரா நடிப்பில் வளர்ந்து வரும் படம் 'யாரடி
நீ மோகினி'. 'ஆடவரை மாட்டலுக்கு அர்தாலு வேருலு' என்ற
தெலுங்கு படமே தமிழில் 'யரடி நீ மோகினி'. இப்படத்தின்
வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் செல்வராகவன்.
யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் வளரும் இப்படத்தில்
முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறகிறார்கள்ர்
ரகுவரன் மற்றும் கார்த்திக் குமார்.
பொல்லாதவனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம்
கொண்ட படம் இது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும்
ஆழத்தை அழகாக சொல்ல வருகிறது 'யாரடி நி மோகினி'.
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம்!
ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் 'ஆனந்தாண்டவம்'
எனும் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறது. 'செல்லமே'
பட இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதை, திரைக்கதை
மற்றும் இயக்கத்தில் 'ஆனந்ததாண்டவம்' வளர்கிறது.
புதுமுகம் சித்தார்த் நாயகனாக நடிக்க நாயகியாக
தமன்னா நடிக்கிறார். வைரமுத்துவின் வைரவரிகளும்,
சுஜாதாவின் கூர்மையான வசனமும் படத்தில் இடம்
பெறுகின்றன.
ஐந்து வருட இடைவேளைக்குப் பின்பு இப்படத்தின் மூலம்
மீண்டும் காலடி எடுத்து வைக்கிறார் கிட்டி. வழக்கம்
போல் காதல்கதைதான் 'ஆனந்ததாண்டவம்'.
தொடர்ந்து படப்பிடிப்பு தமிழகத்தில் முக்கிய
இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட
படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. |