|
"கண்களால்
கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு
உச்சத்தில் இருக்கும் நடிகை ப்ரியாமணி "தோட்டா"
படப்பிடிப்பில் இருந்த அவரிடம் , உங்களது முழு
பயோடேட்டாவை சொல்லுங்கள் என்றோம். ப்ரியாமணி
பேசியதிலிருந்து....... * உண்மையான பெயர் -
பிரியாமணி * பெற்றோர் - அப்பா வாசுதேவன்,
அம்மா லதா. நான் ஒரே ஒரு செல்லக்குட்டி * பிறந்த
ஊர் - கேரளாவில் உள்ள பாலக்காடு * உயரம்
- 5.6 அடி * எடை - 53 கிலோ * படிப்பு
- பெங்களூர் பிஷப் காட்வின் கல்லூரியில் பி ஏ ஆங்கில
இலக்கியம் * முதல் சம்பளம் - நான் மாடலிங்
செய்தபோது கிடைத்த 500 ரூபாய் * அடிக்கடி பார்த்த
படம் - பருத்திவீரன் * முதல் லவ் - என்
12-ஆவது வயதில் ஒரு பையனைக் காதலித்தேன், அவன் இப்போ
எங்கே இருக்கான்னு தெரியலை.
*
முதல் வெளிநாடு பயணம் - இலங்கைக்கு கண்களால் கைது
செய் படப்பிடிப்புக்கு சென்றத * மறக்க முடியாத
படப்பிடிப்புத்தளம் - தேனி, போடி, கம்பம் பகுதிகளை
சுற்றியுள்ள ஊர்கள * பிடித்த நடிகர் -
ஷாருக்கான் * பிடித்த நடிகை - நந்திதாதாஸ்
* பிடித்த இயக்குநர் - பாரதிராஜா, அமீர் *
சென்னையில் பிடித்த இடம் - மெரீனா பீச் * போக
விரும்பும் நாடு - நார்வே * ஆட்டோ கிராப்
வாங்க நினைக்கும் நபர் - ஜாக்கிசான் * ரிஸ்க்
எடுத்து நடித்த காட்சி - பருத்திவீரன் கிளைமாக்ஸ்
* பொறாமைப்படவைத்த நடிகை - 'மொழி' ஜோதிகா
* மறக்க முடியாத சேட்டை - எட்டாம் வகுப்பு
படிக்கும்போது டீச்சரின் சேரில் பெவிகால் தடவியது
* திருமணம் - கண்டிப்பாக லவ் மேரேஜ்தான் *
கெட்டப்பழக்கம் - கோபம் வந்தால் யாரிடமும் பேசாமல்
இருப்பது
*
கிளாமர் - பலருக்கு பொறாமையை வரவழைப்பது *
சினிமாவுக்கு வராவிட்டால் - மாடலிங்கில் கொடி கட்டி
பறந்து கொண்டிருப்பேன * இன்னும் பத்து வருடம்
கழித்து - கண்டிப்பாக ஒரு படம் டைரக்ட் செய்து
கொண்டிருப்பேன * எதிர்பார்ப்பது - ஜீவனுடன
நடிக்கும் "தோட்டா" (செ.ர) |