|
'சிவாஜி'
வெற்றியைத் தொடர்ந்து சங்கர்-ரஜினி கூட்டணி மீண்டும்
இணையும் 'ரோபோ' பற்றியே தற்போது பரபரப்பாக திரைப்பட
உலகிலும், ஊடகங்களிலும் பேசப்படும் செய்தி.
இந்த பரபரப்பு செய்திகளுக்கிடையில் வருகிற பொங்கல்
நன்னாளில் திரைக்கு வரும் படங்களைப் பற்றி திரைப்பட
ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகள்... காத்திருப்பு
செய்திகள்.
வழக்கம் போல் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இந்த முறையும்
ஏமாற்றமே.. ஆம் கமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் 'தசாவதாரம்' தமிழ் வருடப்பிறப்புக்கு
திரைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த முறை பொங்கலுக்கு
களம் இறங்குவது விக்ரம், சிலம்பரசன், சத்யராஜ், சேரன்,
பரத், மாதவன் ஆகியோர் நடித்த படங்களே. எட்டு
திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. இவற்றில்
பொங்கல் ரேசில் - இந்த ஜல்லி கட்டில் - முதல் இடத்தை
தொட போவது எது? வெற்றி வாகைசூடுவது எது என்பது போகப்
போகத்தான் தெரியும்...
இனி பொங்கலுக்கு திரைக்கு வருகின்ற படங்கள் பற்றிய
விவரங்களை காண்போம்...
பீமா
ஏ.எம்.
ரத்னம் தயாரிப்பில் விக்ரம், த்ரிஷா நடிப்பில்
வெளிவருகிறது 'பீமா'. இப்படத்திற்கு
இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். என். லிங்குசாமி
படத்தை இயக்கியிருக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பான
இப்படத்தில் ஒரே ஒரு நடனகாட்சியில் ரசிகர்களின் மனதில்
இடம் பெற வருகிறார் ஷெரின். விக்ரமும், அவரது
ரசிகர்களும் 'பீமா'வை மிகுந்த எதிர்பார்ப்புடன்
வரவேற்க காத்திருக்கிறார்கள்...
காளை
சிலம்பரசன்
நடிப்பில் வெளிவருகிறது 'காளை'. நாயகியாக
நடித்திருக்கிறார் வேதிகா. படத்திற்கான இசையை ஜி.வி.
பிரகாஷ்குமார் அமைத்திருக்கிறார்.
படத்தை இயக்குகிறார்
தருண்கோபி.
இது ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த
படம் என்று சொல்கின்றனர் 'காளை'ப் பட
சம்மந்தப்பட்டவர்கள். பொங்கல் ஜல்லிக்கட்டில் இந்த 'காளை'
முந்துமா? வாழ்த்துக்கள்
மாதவன்
நடிப்பில் வெளிவருகிறது 'வாழ்த்துக்கள்'. மாதவனுடன்
ஜோடி சேர்ந்திருக்கிறார் பாவனா. படத்தை
இயக்கியிருக்கிறார் சீமான். படத்திற்கான இசையை
கவனித்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. இளைஞன் ஒருவன்
அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பே 'வாழ்த்துக்கள்'.
மாதவனின் 'வாழ்த்துகள்' வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்!
தங்கம்
நீண்ட
இடைவேளைக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் இப்படத்தில்
சத்யராஜ் நாயகனாக நடிக்க மேகா நாயர் நாயகியாக
நடித்துள்ளார். இது ரீமிக்ஸ் காலம். பழைய பாடல்களை
புதுமெருகுடன் வெளிவர செய்யும் காலம். அந்த வகையில் 'சொர்க்கம்'
படத்தில் சிவாஜியின் பிரபல பாடலான 'பொன்மகள் வந்தாள்',
ரஜினியில் 'பில்லா' படத்தின் 'மை நேம் இஸ் பில்லா'
போன்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இன்றைய ரசிகர்கள்
மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 'தங்கத்திலும்'
எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான 'பூமழை தூவி வசந்தங்க
வாழ்த்த..'' பாடல்கள் மீண்டும் புதுமெருகுடன் 'வாழ்த்த'
வந்திருக்கிறது. இப்படத்தை கிச்சாஸ் இயக்கியிருக்கிறார்.
'தங்கம்' பத்தரை மாத்து தங்கமாக மின்னுமா..? பழநி
பரத்
நாயகனாகவும், காஜல் அகல்வால் நாயகியாகவும் நடிக்கும்
இப்படத்தில் 'குஷ்பு' முக்கிய கதாபாத்திரம் ஒன்றில்
நடித்திருக்கிறார்.
ஆம் பரத்தின் அக்காவாக குஷ்பு
வருகிறார். சக்தி சிதம்பரம் தயாரித்து அளிக்கும்
இப்படத்தை இயக்கியிருக்கிறார் பேரரசு.
நகைசுவை
காட்சியில் மின்ன வருகிறார் எம்.எஸ். பாஸ்கர்.
'பழ நி' சுவை தருமா..! பிரிவோம்...சந்திப்போம்...
சேரனுடன்
ஜோடி சேர்ந்திருக்கிறார் சிநேகா. கூட்டுக்குடும்பம்
அதன் பின்னணியில் நடைபெறும் சுவையான காட்சிகள் என்று
கதை சொல்ல வருகிறது 'பிரிவோம்.. சந்திப்போம்..''.
வித்யாசாகர் இசையமைக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
கரு. பழனியப்பன். 'பிரிவோம்.. சந்திப்போம்..'' காண
மீண்டும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வைக்க
வாழ்த்துகள்! பிடிச்சிருக்கு புதுமுகங்கள்
அசோக் மற்றும் விசாகா நாயகனாக நாயகியாக நடிக்கும்
இப்படத்தை பிரபல இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளரான
கனகு இயக்கியிருக்கிறார். வழக்கம் போல் காதல் கதைதான்
என்றாலும் சற்று வித்தியாசமாக அந்த காதலை சொல்கிறது 'பிடிச்சிருக்கு'.
'பிடிச்சிருக்கு' ரசிர்களை படம் 'பிடிச்சிருக்கு' என்று
சொல்ல வைக்குமா? அசோகா ரகுவரன் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தை இயக்கி
நடித்திருக்கிறார் பிரேம். இயக்குநர் பாரதிராஜாவிடம்
உதவியாளராக பணிப்புரியும் ராஜா சந்திரசேகரின் வசனத்தில்
வெளிவருகிறது 'அசோகா'. பாடல்கள் எதுவும் இடம் பெறாத
படம் இது என்பதே இப்படத்தைப் பற்றிய முக்கிய
செய்தியாகும். |