2007ம்
ஆண்டு திரைக்கு வந்த திரைப்படங்களை திரும்பிப்
பார்க்கின்ற போது 'சிவாஜி'யை குறிப்பிடாமல் இருக்க
முடியாது. 'சிவாஜி' திரைக்கு வருவதற்கு முன்பும்,
திரைக்கு வந்தப் பின்பும் தமி ழகம் எங்கும்
ஏற்படுத்திய ஓர் அதிர்வு அலை தமிழ்திரைப்பட உலகம்
இதுவரை காணாத காட்சி.
ஏவிம் நிறுவனம் - இயக்குநர் சங்கர் - ரஜினி என்ற
பிரம்மாண்டமான கூட்டணியில் 'சிவாஜி' உருவானதில் இருந்து
படத்தைப் பற்றி பல்வேறு யூகங்களும்,
புதுபுதுத்தகவல்களும் பல்வேறு ஊடக ங்களில் வலம் வரத்
தொடங்கி ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் படத்தைப்
பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் எங்கும் ஒரே நேரத்தில் அதிகமான
திரையரங்குகளில் திரைக்கு வந்த சிவாஜி 'The Boss'
சாதனைப்படைத்தது.
Spiderman ஆங்கில திரைப்படத்திற்கு அடுத்து
திரைப்படம் ஒன்றைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள
ரசிகர்கள் இணையதளம் (Google இணையதளம்) ஒன்றை அதிகளவில்
பயன்படுத் தியது சிவாஜி படத்திற்குதான் என்று
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் (25.12.07) செய்தி ஒன்று
வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு யாரும்
எதிர்பார்த்ததைவிட, நம்பமுடியாத அளவி ற்கு சிவாஜி
மாபெரும் வெற்றியை ஈட்டியது.
முதன்முதலாக
தென்னிந்திய மொழியில் குறிப்பாக தமிழில்
தயாரிக்கப்பட்ட படம் ஒன்று இந்திய அளவில், ஏன் உலகளவில்
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது
சாதாரண விஷயமல்ல. சிவாஜி படத்தைப் பற்றிய செய்திகள்
எல்லா தொலைக்காட்சிகளிலும் - தமிழ் தொலைகாட்சிகள்
மட்டுமல்ல, இந்திய மற்றும் உலகளவில் உள்ள
தொலைக்காட்சிகளிலும் - தந லப்பு செய்தியாக
இடம்பிடித்தது.
60 வருட பாரம்பரிய மிக்க ஏவிஎம் நிறுவனம், சிறந்த
படங்களை இயக்கிய இயக்குநர் சங்கர், இன்று இசையுலகில்
கொடிகட்டி பறக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுடன் சூப்பர்
ஸ்டார் ரஜினி காந்த் என்று ஜாம்பாவான்களின் கூட்டணி
வெற்றி கூட்டணிதான் என்றாலும், அந்த வெற்றி பிரமிக்க
வைக்கும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'சிவாஜி The
Boss' தொட்டிருக்கிறார் என்றால் அது ரஜினி என்ற மூன்று
எழுத்து மந்திரத்தின் சக்தி என்றே சொல்ல வேண்டும்.
உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்த 'சிவாஜி' கடந்த ஜுன் மாதம் 15ம் தேதி
தமிழகம் எங்கும் திரையிடப்பட்டது. தமிழ் மற்றும்
தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் 'சிவாஜி' திரைக்கு
வந்தது. உலகெங்கும் உள்ள 27 நாடுகளில் சுமார்
2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு
சாதனைப்படைத்தது.
'சிவாஜி'
திரைக்கு வருகிறார் என்றவுடன் திரையிட காத்திருந்த பல
படங்கள் களத்தில் இருந்து ஒதுங்கிகொண்டது. இந்தியாவின்
வடமாநிலங்களிலும் சிவாஜிக்கு நல்ல வரவேற்பு. மொழி ம ற்றம்
செய்யாமல், சப் டைட்டில் கொடுக்காமல் வெளிவந்த ஒரு
தமிழ் படத்திற்கு வடஇந்தியாவில் கிடைத்த வரவேற்பு ...
சிவாஜி 'The Boss' என்றே சொல்லத் தோன்றுகிறது.
உலக அளவில் பேசப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம்
'சிவாஜி'. உலகத் திரைப்பட வர்த்தகத்தில் தமிழ்
திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைக்க செய்த பெருமை 'சிவாஜி'க்கே
சேரும். மலும் சிவாஜி அமெரிக்காவில் உள்ள 60
திரையரங்குகளுக்கு மேல் அதிர்வு அலையை
ஏற்படுத்திவிட்டது.
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கூர்மையான வசனமும்,
பீட்டர் ஹெய்னின் பிரமிப்பூட்டும் சண்டைகாட்சிகளும்,
கே.வி.ஆனந்தின் அற்புதமான அசர வைக்கும் ஒளிப்பதிவும்,
தோட்டாதரணியின் பளபளக்கும் பிரம்மாண்டமான செட்
அமைப்பும், இளமையான ரஜினியின் துடிப்பான நடிப்பும்,
விவேக்கின் நகைச்சுவையும், ஸ்ரேயாவின் கிளாமரும்
மற்றும் நளினமான நடனமும் , முத்தாய்ப்பாக சங்கரின்
இயக்கமும் 'சிவாஜி'யின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம்
என்றால் அதுமிகையல்ல.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி'யை நினைத்தால்
ரசிகர்கள் மனது இன்றும் 'சும்மா அதிருதில்ல'! |