தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சினிமா செய்திகள்
கேடிஸ்ரீ  
மீண்டும் பாண்டியராஜன்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாண்டியராஜன் 'துள்ளும் இள நெஞ்சே' படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை ஸ்ரீபாலாஜநஃபிலிம்ஸ் தயாரித்து வழங்கவிருக்கிறது. இ.எம். ராமமூர்த்தி என்பவர் இப்படத்தை இயக்கிவருகிறார்.

ராமமூர்த்தி புதியவராக இருந்தாலும் ஒரே சமயத்தில் 'சுக்ரதசை', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

'துள்ளும் இள நெஞ்சே' த்ரில்லர் நிறைந்த ஒரு காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

வளரும் 'காதல் மெய்பட'
'காதல் மெய்பட' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறது துவாரகமாயி சினி புரொடக்ஷன்ஸ். சந்தானபாரதியிடம் உதவியாளராக பணியாற்றிய விஷ்வதனுஷ் இப்படத்தின் இயக்கம் மற்றும் திரைக்கதையை கவனிக்கிறார்.

'இலக்கணம்' படத்தின் நாயகன் விஷ்ணுபிரியன் நாயகனாக நடிக்க, நாயகியாக மதுமிதா நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசன் விஜய், குயிலி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில நகைச்சுவை காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது.

'காதல் மெய்பட' படத்தின் கதை, வசனத்தை கவனிக்கிறார் எஸ். நந்தகுமார்.

சிலம்பரசனின் 'சிலம்பாட்டம்'

லட்சுமி மூவிமேக்கர்ஸ் இந்தியா லிட் நிறுவனம் 'சிலம்பாட்டம்' என்ற புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இத இந்நிறுவனத்தில் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கோயில் அர்ச்சகராக நடிக்கிறார் சிலம்பரசன்.

நாயகிகளாக மும்பை மாடல்கள் இருவர் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சந்தானம், கஞ்சாகருப்பு, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தினாவின் இசையில் வளரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் எஸ். சரவணன்.

இப்படத்தில் இடம்பெறவிருக்கும் சிலம்பரசனின் சிலம்பாட்டம் ரசிகர்களை நிச்சயமாக கலங்கடிக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் எஸ். சரவணன்.

தொகுப்பு Published on 24th Dec, 2007
மேலும்