|
கமல்ஹாசன்
இப்போதெல்லாம் தாடியுடனே தென்படுகிறார். 'தசாவதாரத்தில்'
இதுவும் ஒரு அவதாரமோ என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.
ஆனால் இந்த அவதாரம் 'தசாவதாரத்திற்காக' அல்ல! ஆம்..
தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் அடுத்த
படத்திற்கான கெட்டப்தான் இந்த தாடி! தசாவதாரத்திற்கு
பிறகு 'மர்மயோகி' என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிக்க
கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். 'மர்மயோகி' வருகிற தமிழ்
வருட தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. கமல்ஹாசனின்
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை
தயாரிக்கிறது. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று
அனைத்தும் வழக்கம் போல் கமல்ஹாசனே கவனித்துக்
கொள்கிறார். ஹிந்தி திரைப்பட உலகின் முன்னாள் 'கனவுகன்னி'
ஹேமமாலினி 'மர்மயோகி'யில் முக்கிய பாத்திரத்தில்
நடிக்கவிருக்கிறார் என்பது சிறப்பு. |