சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். வாக்கிய ரீதியாக 21.12.2011 அன்று காலை 08.04 மணியளவில் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
(திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா) 16.12.2014 வரை சனி பகவான் துலா ராசியில் உலா வருகிறார்.
துலா ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் செவ்வாய் கிரகத்துக்கு உரிய சித்திரை 3,4 பாதங்களிலும் ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்திலும், குருவின் நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம்1,2,3 பாதங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்.
இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் இந்த முறை சுமார் 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். இதற்கு காரணம் அவரது வக்ரகதி காலம் அதிகமிருப்பதுதான். இந்த காலத்தில் அவர் 3 முறை வக்கிரமாகிறார். அதனால்தான் அவரது சஞ்சாரம் 3 ஆண்டுகள் ஆகிறது.
15.11.2011 முதல் 06.02.2012 வரை துலா ராசி சித்திரை நேர்கதி 2 மாதம் 3வாரம்.
6.02.2012 முதல் 25.6.2012 வரை துலா ராசி சித்திரை வக்கிரம் 4 மாதம் 2வாரம்.
25.6.2012 முதல் 04.8.2012 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் 1 மாதம் 1 வாரம்.
04.8.2012 முதல் 11.10.2012 வரை துலா ராசி சித்திரை நேர்கதி 2 மாதம் 1 வாரம்.
11.10.2012 முதல் 18.2.2013 வரை துலா ராசி சுவாதி நேர்கதி 4 மாதம் 1 வாரம்.
18.02.2013 முதல் 7.7.2013 வரை துலா ராசி சுவாதி வக்கிரகதி 4 மாதம் 3 வாரம்.
07.07.2013 முதல் 4.11.2013 வரை துலா ராசி சுவாதி நேர்கதி 4 மாதம்.
04.11.2013 முதல் 02.3.2014 வரை துலா ராசி விசாகம் நேர்கதி 4 மாதம்.
02.03.2014 முதல் 20.07.2014 வரை துலாராசி விசாகம் வக்கிரகதி. 4 மாதம் 2 வாரம்.
20.07.2014 முதல் 02.11.2014 வரை துலாராசி விசாகம் நேர்கதி 3 மாதம் 2 வாரம்.
சனி 12 ராசிகளையும் 30 ஆண்டுகளில் ஒரு முறை சுற்றி வரும்.இதில் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு குறைவாகவும்ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகவும் இருக்கும்.
சனிக்கு செவ்வாய் பகை கிரகமாகும். ராகு நட்பு கிரகமாகும்.குரு சமமானவர். அதனால் செவ்வாயின் நட்சத்திரமானசித்திரை 3,4 பாதங்களில் சனி சஞ்சாரம் செய்யும்போதும்வக்கிரகதியில் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும்போதும்
அவ்வளவாக நல்ல பலன் தரமாட்டார். ராகுவின் நட்சத்திரம் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போதும் கெடுபலன்அதிகம் தரமாட்டார் என்றே சொல்லவேண்டும். மேலும் துலாம்சனியின் உச்சவீடாகும். இங்கு அவர் பலமாகிறார்.
அவரது பார்வை நீச்சவீடான மேஷம் மீது விழுகிறது.உச்சம் பெற்ற கிரகம் நீச்ச வீட்டை பார்க்கும்போதுநீச்சவீடு பலம் பெறும் என்பது ஜோதிட விதி. அதன்படி மேஷம் பல்ம் பெறுகிறது.ஆனால் சனி அசுப கிரகம் ஆகையால் அவர்து பார்வை அந்தளவு நல்ல பலன் தராது. பதிலாக கெடு பலனைதரும் என்று கூறலாம். இதே போல் சனி பகவான் 3,10 வதுபார்வையாக தனுசு மற்றும் கடக ராசிகளின் மீது விழுகிறது.மேஷ ராசிக்கு சனி கண்டக சனியாகவும் இருக்கிறார்.
எனவே மேஷராசிகாரர்கள் சனி பகவானுக்கு உரிய பரிகாரங்களையும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
துலாராசிக்கு ஜென்ம சனியாகவும், மீன ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனியாகவும் கடக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனியாகவுமஇருப்பதால் அந்த ராசிக்காரர்களும் சனி பகவானுக்குஉரிய பரிகாரங்களை அவசியம் செய்ய வேண்டும்.
வக்கிர கதியில் சஞ்சாரம் செய்யும் போதும் கன்னி ராசியில் உலாவரும் போதும் சனி அதிகம் கெடுபலனை தரமாட்டார். உச்ச்ம் பெற்ற கிரகம்
வக்கிரம் அடையும் போது நீச்ச பலன் தரும் என்பது ஜோதிட விதி.அதன் படி வக்கிரமடையும் சனியின் பலம் குறையும். அதனால் அவரது கெடுபலன் குறைந்து நற்பலன்கள் கூடும். கடின உழைப்பு இல்லாமல் எதையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை காணப்படும். தடை தாமதங்கள் விலகி காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.
குறிப்பாக மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினர் சனியின் வக்கிர காலத்தில் நற்பலன் பெறுவார்கள்.
இனி 12 ராசிக்காரர்களுக்கும் சனி பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.