ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012 ஜோதிட சுடர், ஜோதிட ரத்னா
ஜி எஸ் வாசன்
jothidaseithi@gmail.com
Ph : 9444101786


 
 

ஆங்கில புத்தாண்டு 2012 உத்தரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் பிறக்கிறது. ஆண்டு பிறக்கும் போது உள்ள கிரக நிலைகளை பார்க்கும்போது இந்த ஆண்டு பல நன்மைகளைத்தரும் ஆண்டாக இருக்கும் எனலாம். தனம், குடும்ப ஸ்தானத்தில் சனி உச்சம் பெற்று இருப்பதும் குருபார்வை பெறுவதும் நிதி நிலை சீராகும். விவாகரத்து வழக்குகள் குறையும். அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக செயல்படுவார்கள். நான்காம் பாவத்தில் சூரியன், புதன் சேர்க்கைப் பெறுவதும் அவர்களை குரு பார்ப்பதும் அரசாங்க வழிகளில் நன்மைகள் கூடும். கல்விக்கான பணிகள் சிறக்கும். அறிவு பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியலில் இருந்த குளறுபடிகள் தீரும்.

பூமிகாரகனான செவ்வாய் 12-ல் மறைவு பெற்றாலும் குருபார்வையிருப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த பின்னடைவு நீங்கும். முன்னேற்றம் உண்டாகும். அதே போல் 4 பாவமும் பலம் பெறுவதால் பாதியில் நின்ற கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும், புதிய கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை கூடும். சந்திரன் 7-ம் இடமான குருவீட்டில் இருப்பதும் லக்கினத்தை பார்ப்பதும் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள். மழைப்பொழிவு அதிகரிக்கும். 10-ம்பாவாதிபதியான புதன் வலுவாக இருப்பதால் தொழில், வியாபாரங்கள் சிறப்படையும், புதிய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயம் சிறக்கும். 9-ல் ஞானக்காரகனான கேது இருப்பதால் ஆன்மீக பணிகள் சிறக்கும்.

கிரக பெயர்ச்சிகள்:

2012 மே.15 –ல் குருபெயர்ச்சி
2012 டிசம்பர் 2 –ல் ராகு கேது பெயர்ச்சி

கோட்சார ரீதியாக மே மாத குரு பெயர்ச்சிக்கு பின்னர் பொருளாதார நிலை உயரும். அண்டை நாடுகள் நட்பு கரம் நீட்டுவார்கள். கடல் வாணிபம் பெருகும். கல்வியின் தரம் உயரும்.

பொதுவாக இந்த ஆண்டு நற்பலன்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு

மகரம்
கும்பம்
மீனம்

 

உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


இன்றைய ராசி பலன்

 KANYAKANYA : நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். கூட்டுறவு நன்மை ...மேலும்

Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.